இவற்றுக்கு எதிராக செயற்பட்டதன் காரணமாகவே தான் இப்போது சிறைக்கம்பிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார். தன்னை சிறையில் அடைப்பது தொடர்பில் முஸ்லிம், கிறிஸ்தவ இயக்கங்கள் மட்டுமன்றி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பின்னணியில் செயற்பட்டுள்ளதாகவும் ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.
சிறைச்சாலை விதிகளின் பிரகாரம் தடுப்புக் காவல் அல்லது தண்டனை விதிக்கப்பட்ட எந்தவொரு கைதியும் எதுவிதமான கடிதங்கள், எழுத்து ஆவணங்களை வெளியில் அனுப்ப முடியாது. சிறைச்சாலை நிர்வாகத்தினால் வழங்கப்படும் கடித உறையில் எழுதிக் கொடுக்கப்படும் கடிதங்கள் மட்டும் கடும் பரிசீலனையின் பின்னர் கைதிகளின் உறவினர்களுக்கு அனுப்பப்படும்.ஆனால் கலகொட அத்தே ஞானசார தேரர் விடயத்தில் குறித்த விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. அவர் தனது வழக்கு தொடர்பாக விமர்சனங்களை வெளியிட்டுள்ள கடிதம் நேரடியாக ஊடகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன எழுதியனுப்பிய கடிதம் ஒன்றும் திவயின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.