பிரபாகரனால் செய்யமுடியாததை வேறு எவராலும் செய்ய முடியாது
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர முடியாத எந்தவொரு உரிமைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனாலோ, அல்லது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாலோ, அல்லது அவரது பாட்டனாராலோ பெற்றுத்தர முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், கடந்த காலங்களில் இந்த நாட்டிலே பல உயரிய பதவிகளை தமிழர்கள் வகித்திருந்தனர். “வடக்கு கிழக்கிலே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும், இன்னும் சிலருக்குமிடையில் பதவிப் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த நாட்டிலே இருந்த தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் தமிழ் மக்களுக்குப் பெற்றுத்தர முடியாத எந்தவெரு உரிமைகளையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனாலே, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனாலோ, அல்லது அவரது பாட்டனாராலோ பெற்றுத்தர முடியாது. எனவே தற்கால சூழலுக்கு ஏற்றவகையில் கடந்த கால இழப்புக்களை ஈடு செய்வதற்கு தற்போதிருக்கின்ற சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி, எமது மக்களின் கல்வி, கலை கலாசாரம், போன்றவற்றை மேம்படுத்த அனைவரும் முன்னிற்க வேண்டும் ” எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Add Comments