யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இலங்கை தமிழரசு கட்சியின உறுப்பினர்களை நட்பு ரீதியாக சந்தித்துள்ளார். நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான ஆலோசனை இணையத்தளத்தினை அங்குரார்ப்பணம் செய்து வைப்பதற்காக யாழ்ப்பாணம் சென்ற வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருகின்றனார். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தலைமையத்தில் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன் மற்றும் தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். சுமார் 30 நிமிடங்கள் வரை நீடித்த சந்திப்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதில் தமிழரசு கட்சியை பிரதானமாக கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வகிபாகம் குறித்து நட்பு ரீதியாக பேசப்பட்டுள்ளது.