வட மாகாண சபையின் அடுத்த அமர்வை பகிஷ்கரிக்க உறுப்பினர்கள் சிலர் திட்டம்?; கூட்டமைப்பு முக்கியஸ்தர் பின்னணி


ரொஷான் நாகலிங்கம்

எதிர்வரும் வடமாகாண சபை அமர்வை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பகிஷ்கரித்து வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராகவே வெளிநடப்பு செய்யப்படவுள்ளதாக தகவல் தந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேவேளை அவ்வாறு வெளிநடப்பு செய்ய திட்டமிட்டுள்ள சில உறுப்பினர்கள் தமக்கு ஆதரவினை பலப்படுத்தும் வகையில் நேற்று முன்தினமும் நேற்றும்
ஏனைய சபை உறுப்பினர்களுடன் பேசி  தமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தொலைபேசியூடாக கோரியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தக் குழுவினரே  முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவும் தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளில் முதலமைச்சர் ஈடுபடக் கூடாதென அறிக்கையையும் வெளியிட்டவர்கள்.
அவர்களது இந்த இரு திட்டமும் பிசுபிசுத்து போன நிலையில்,  தமிழ்க் கூட்டமைப்பு முக்கியஸ்தர் ஒருவரின் அறிவுரைக்கமைய மீண்டும்  முதலமைச்சரின் செயற்பாட்டை குழப்பும்  வகையில் வெளிநடப்பு திட்டத்தை அரங்கேற்ற முற்படுவதாக தகவல் தந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila