மாங்குளம், ஒட்டுசுட்டான், மன்னாகண்டல், வட்டுவாகல், கொக்குளாய் ஆகிய பிரதேசங்களில் பெரிய விகாரைகளும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் சிறிய விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களின் காணிகளை சட்டத்துக்கு முரணாக அபகரித்த படையினா் தமது வழிபாட்டுக்கு ஏற்ற முறையில் விகாரைகளை அமைத்துள்ளனா். அத்துடன் தென்பகுதியில் இருந்து செல்லும் பௌத்த சிங்கள மக்கள் தங்கியிருந்து வழிபடுவதற்கு ஏற்புடையதாக விகாரைகளுக்கு அருகில் மண்டபங்களையும் அமைக்க திட்டமிட்டுள்ளனர். கொக்குளாய் பிரதேசத்தில் விகாரை அமைக்கும் பணியை நிறுத்துமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த வருடம் உத்திரவிட்டிருந்தது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவையும் மீறி விகாரை அமைக்கும் பணி படையினரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் அவா் குறிப்பிட்டார். |
முல்லைத்தீவில் பொதுமக்களின் காணிகளில் 9 பௌத்த விகாரைகள்!
Add Comments