முப்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 179 பேர் பசிலின் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தொடர்பில், மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்காக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுகொள்வதற்காக கோட்டபாய ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அமைச்சர் ஒருவரின் பாதுகாப்புக்கு இராணுவத்தினரை ஈடுபடுத்துவது கடுமையான குற்றம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக பசில் ராஜபக்ஷவின் உடல் சுகாதாரம் மற்றும் வீட்டினை சுத்தம் செய்வதற்காகவும், அரசாங்க பாதுகாப்பு பிரிவு படையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை விசாரணைகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அமைச்சரின் அதிகாரத்தை மீறி அடிப்படையின்றி இவ்வாறு இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசியல் மோதல்களில் தலையிடாமல் அமைதியாகுமாறு கோட்டபாய ராஜபக்ஷவின் ஆலோசகர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அதற்கமைய சிறிது காலம் நாட்டை விட்டு செல்லுமாறும் கோத்தபாயவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எது எவ்வாறு இருப்பினும் கோட்டபாயவின் மனைவியின் தாயாரின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளமையினால் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.