
இராணுவ உயரதிகாரி ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் சிலரைஇரகசியமாக சந்திக்க முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சதிட்டமிட்டுள்ளார்.
தமக்கு நெருக்கமான உயர் இராணுவ அதிகாரியொருவர் மற்றும் இராணுவத்தின் சிலஉயரதிகாரிகளுடன் பசில் ராஜபக்ச இவ்வாறு இரகசிய சந்திப்பு நடத்த உள்ளார்.
இதற்கான திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சிரேஸ்ட உயர் இராணுவ அதிகாரி தொடர்ச்சியாக பசில் ராஜபக்சவுடன் இரகசியதொடர்பாடல்களை பேணி வருவதாகவும் தொலைபேசி ஊடாக தொடர்பு பேணி வருவதாகவும்தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கடி பசில் ராஜபக்சவை சந்தித்து வந்த உயர் இராணுவ அதிகாரி தமக்குநெருக்கமான சில இராணுவ அதிகாரிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
விரைவில் பசில், இராணுவ உயர் அதிகாரிகள் சிலருடன் இரகசிய சந்திப்பு நடத்தஉள்ளமை பற்றிய விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இது பற்றிய விபரங்கள்ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது.