கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது நாளிதழில் முதலமைச்சர் பேரவையிலிருந்து விலகிவிட்டதாகச் செய்தி வெளியிடப்பட்டதையடுத்தே தொடர்புடைய தரப்பு மறுப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையினரால் தயாரிக்கப்பட்ட அரசியல் யாப்பு இறுதி செய்யும் முகமாக நேற்று முன்தினம் யாழ். பொது நூலகத்தில் கூடிய போது நடவடிக்கைக்குழுவொன்றை அமைப்பது பற்றி பேசப்பட்டு அதற்கு தலைமை தாங்க முதலமைச்சரிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும் அதிகரித்த வேலைப்பழுவை காரணங்காட்டி தனத ஆதரவை மட்டும் தெரிவித்து முதல்வர் இணைத்தலைவர் பதவியை மட்டும் தான் வகிக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கைக்குழுவை நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது 11 பேர் கொண்ட குழுவாக அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையிலேயே, குறித்த நடவடிக்கை குழுவினில் புதியவர்களை நியமிக்க ஆலோசனை வழங்கியதுடன் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தான் இணைத்தலைவர் பதவியை தொடர்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.