வடமாகாண சபையினால் கடந்த வாரம் சமர்பிக்கப்பட்ட அரசியலமைப்பு சீர்திருத்தம் ஏற்கனவே சர்வேஸ்வரன் -சிவாஜிலிங்கம் தரப்பால் தயாரிக்கபட்டதை பேரவை தலைவர் தெற்கு அரசியல் நலன்களிற்கு எற்ப குத்தி குதறி ஏதுமற்றதாக்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முதலமைச்சரை சந்தித்து விளக்கமளிக்க தொடர்புடைய தரப்புக்கள் முற்பட்ட போதும் முதலமைச்சர் பக்கமிருந்து நேரம் ஒதுக்கப்பட்டிருக்கவில்லையென கூறப்படுகின்றது. இதனையடுத்தே சிவாஜிலிங்கம் தனித்து தனது ஆலோசளைகளை ஊடகங்களிடமும் பேரவையிலும் முன்வைத்திருந்தார்.
இந்நிலையினில் குறித்த வடமாகாண சபையின் யோசனைகள் முழுமை பெறாத காரணத்தினால் அதன் மீதான விவாதத்தை ஒத்தி வைப்பதாக இன்று அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
வடமாகாண சபையின் 49வது விஷேட அமர்வு இன்று காலை கைதடியில் உள்ள வடமாகாண சபை கட்டிடத்தில் ஆரம்பமானது. தமிழ் மக்களுக்காக வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு மற்றும் அரசியல் யாப்புக்கான கொள்கை வரைவுத்திட்டம் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரனினால் கடந்த வியாழக்கிழமை வடமாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த விவாதம் ஒத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து நியதிசட்டம் சம்பந்தமான விவாதம் இடம்பெற்றிருந்தது.