
ஐ.நா முன்கூட்டியே அறிந்திருந்தது.- ஐ.நா வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது.
இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபைக்கு முன்கூட்டியே அறிவித்திருந்ததாக ஐ.நா வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் ரோரன்டோ நகரிலுவுள்ள யோர்க் பல்கலைக்கழகத்தில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை என் சிவலிங்கம் ஞாபகார்த்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறப்பு அதீதியாகக் கலந்து கொண்ட ஐ.நா வின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2008 ஆம் ஆண்டு அவரது நாட்டில் தொடரும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பாரிய போர் ஒன்றை முன்னெடுத்துள்ளதை ஐ.நாவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்ததாகத் தெரிவித்தார். இதற்காக மகிந்தவை தான் கண்டிக்கவில்லை என்றும் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.