மாகாணசபை விவகாரம் குறித்து சுமந்திரன் அணியுடன் பேச்சாம்?

tamil arasu katchi may day-04

சுமந்திரனுக்கு ஆதரவு கும்பலுடன் பேசப்போவதாக இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இவர்கள் வடக்கு மாகாணசபையை இயங்கவிடாது சில உறுப்பினர்கள் குழப்புகின்றனரென தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இரா.சம்பந்தனிடம் நேரடியாக குற்றம்சாட்டியுள்ளதையடுத்தே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குழப்பங்களுக்கு தீர்வு காணும் வகையில் விரைவில் வட மாகாணசபை உறுப்பினர்களை அழைத்து பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு ஆதரவாக கொண்டு இருந்து வடக்கு மாகாண சபையை குழப்புவது நிறுத்த வேண்டும். மாகாண சபையை ஒழுங்காக இயங்கவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வடமாகாண சபையில் தீர்வுத் திட்டம் கொண்டு வரப்பட்டபோது வடக்கு – கிழக்கு இணைப்பு என்ற விடயத்தை இந்தக்குழு ஏற்கவில்லை. இந்தக் குழுவிலுள்ள முஸ்லிம் உறுப்பினர் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் தேசியப்பட்டியலில் தான் வந்தவர். ஆகவே எங்களுக்கு கிடைத்த தேசியப்பட்டியலில் ஒருவருடத்திற்கு ஒருவர் என மாற்றிக் கொடுக்கின்றோம்.
அதேபோன்று முஸ்லிம் உறுப்பினருக்கு கொடுத்ததில் ஒருவரை ஏன் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்? அவருக்குப் பதிலாக இன்னொரு முஸ்லிமை நாம் நியமிக்க முடியும் தானே போன்ற விடயங்கள் சுட்டிக் காட்டப்பட்டன.
இது சம்பந்தமாக நாம் ஆலோசித்து முடிவெடுப்போம் என்று சம்பந்தன் கூறினார் எனவும், இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து வட மாகாண சபை உறுப்பினர்களையும் அழைத்து விரைவில் கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக சம்பந்தன் கூறியுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila