யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியுள்ளதாக தெரிவித்து அரசாங்கம், சர்வதேசத்தை ஏமாற்றி வருகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சொந்தமான காணிகளில் நலன்புரி முகாம்களிலுள்ள மக்களை குடியமர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், விடுவிக்கப்பட்ட காணிகள் மற்றும் குடியேற்ற வேலைத்திட்டங்களை நேரில் ஆய்வு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், “வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட வேண்டிய மொத்த காணிகளில் 2 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமான காணிகள் விமான நிலையம் அமைப்பதற்கும், கடற்படையின் தேவைக்கும் சுவீகரிக்கப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். இந்த செயற்பாடானது மக்களது காணிகளை அபகரித்து இராணுவ தேவைகளுக்கு பயன்படுத்துவதாகவுள்ளது. விடுவிக்கப்பட்ட ஒரு தொகுதி நிலப்பரப்பில் விடுவிப்பதாக கூறிய வீதிகள் முற்றாக விடுவிக்கவில்லை. வலிகாமம் வடக்கில் உள்ள மேலதிகமான இராணுவத்தை வெளியேற்றுவதனூடாக மக்களது காணிகளை அவர்களிடமே மீளக்கையளிக்க முடியும். மக்களிடம் இருந்து சுவிகரிக்கப்பட்ட காணிகள் மக்களுக்கே திருப்பி கொடுக்கப்பட வேண்டும். அத்துடன் வீதிகளும் முழுமையாக மக்கள் பாவனைக்காக திறக்கப்பட வேணடும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் சர்வதேசத்தை ஏமாற்றிவருகிறது: சுரேஷ்
Posted by : srifm on Flash News On 01:25:00

Add Comments