அரசுடன் பேசுவதற்கான குழுவில் மட்டு, அம்பாறை மாவட்ட பிரதிநிதிகள் புறக்கணிப்பு!

தமிழ் தேசியக் கூடடமைப்பு சார்பில் அரசாங்கத்துடன் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்காக அமைக்கப்பட்டுள்ள குழுவில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் முகமாக தேசிய அரசாங்கத்துடன் விரைவில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றது.
எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம் (ஜனா), ஹென்றி மகேந்திரன், ஸ்ரீகாந்தா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவநேசன் (பவன்), ஆர்.ராகவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அரசாங்கத்துடன், கலந்துரையாடுவதற்கு உரிய நடவடிக்கைகளை கையாண்டு முன்னேற்றகரமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் சார்பில் தலா இருவர் வீதம் எண்மரடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், அதன் செயலாளர் சிவசக்தி ஆனந்தன், ரெலோ அமைப்பின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், அதன் மூத்த உறுப்பினரான ஸ்ரீகாந்தா, புளொட் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், அதன் மத்திய குழு உறுப்பினர் ஆர்.ராகவன் ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila