வடமாகாண முதலமைச்சரின் வவுனியா பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்து நாளை விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.
எனினும் மத்திய அமைச்சர் றிசாத் பதியூதின் மற்றும் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஏற்பாட்டில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையினில் வவுனியா மாவட்டத்திலுள்ள பல்வேறு கமக்கார அமைப்புக்களும் ஒன்றிணைந்து நாளை முதலமைச்சரிற்கு ஆதரவாக போராட்டத்தை நடத்தவுள்ளனர்.
இப்போராட்டம் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே இன்றைய போராட்டத்திற்கு அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆதரவாளரான மாகாணசபை உறுப்பினர் ஜெயதிலக முன்னின்று செயற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சிறிரெலோ போன்ற மகிந்த ராஜபக்ச ஆதரவு அணிகளும் களமிங்கியிருந்தன.
விவசாயிகளின் நலன்காக்க இன்றைய போராட்டத்தை முன்னெடுப்பதாக அவர்கள் கூறியபோதும், பெருமளவான விவசாய அமைப்புக்கள் ஓமந்தையிலே பொருளாதார மத்திய நிலையம் அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நாளை போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.