யாழ்.பேரூந்து நிலையத்தின் முன்பாக இன்று (திங்கட்கிழமை) காலை முதல் குறித்த கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், பெருந்திரளான மக்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன்போது, ‘நாடுதழுவிய ரீதியில் மூவின மக்களையும் ஒன்றிணைத்து இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து’, ‘மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தை வெளியேற்று’, ‘அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு’, ‘அரசியல் கைதிகளை விடுதலை செய்’ போன்ற சுலோகங்களை தாங்கிய பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
குறித்த கையெழுத்து பெறும் செயற்பாடானது நாடு முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள அதேவேளை, பெறப்படும் கையெழுத்துக்களுடன் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜரொன்றை, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக சமவுரிமை இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.