புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரி வடக்கு மாகாண சபையில் இன்று பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 58 ஆவது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) கைதடியிலமைந்துள்ள வடக்கு மாகாணசபை கட்டடத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த அமர்வில் வடக்குமாகாண சபை உறுப்பினர் ரவிகரனால் குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து விடுதலையாகிய முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகள் நூற்றிற்கும் மேற்பட்டோர் மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அதன் உண்மைத் தன்மையை ஆராயவேண்டுமென வலியுறுத்தி குறித்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.