பௌத்ததுறவிகளின் ஆசிர்வாத்துடன் மீண்டும் குடியேற்றம் புல்மோட்டை – அனுராதபுரம் பிரதான வீதியில் 12 ஆம் கட்டைபகுதியில் மாத்தளை, அனுராதபுரம், போன்ற பகுதிகளைச்சேர்ந்த பெரும் பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் இரவோடிரவாக குடியேற்றப் பட்டுள்ளார்கள்,
இதுபற்றி குறித்த பகுதிக்குப்பொறுப்பான கிராம சேவையாளர் குடியேறியவர்களிடம் வினவியபோது தாம் விகாராதிபதி அவர்களின் வேண்டுதலின்பேரிலேயே இங்குவந்து குடியேறியதாக தெரிவித்துள்ளனர், உங்களால் முடிந்த தை செய்யுங்கள் என்று விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புல்மோட்டை – கொக்கிளாய் வீதியில் யுத்தகாலத்தில் வெளியேறியபுல்மோட்டை மக்கள் குடியேறியபோது வன இலாக்காவினரும், குச்சவெளி பிரதேச செயலகமும் தனித்தனி வழக்குகள் போட்டு அவர்களை வெளியேற்றினர், தற்போது ஏற்பட்டுள்ள நிலையில் என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றனர் இத்திணைக்களத்தினர் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்பாக உள்ளது