அவர் தனது கட்டுரையில் பல விடயங்கள் பற்றி எழுதியுள்ளார்.
“கிரேக்கப் புராணங்களிலே சிசைபஸ் (Sisyphus) என்றொரு பாத்திரம் இருந்தது.
அவருடைய வேலை என்னவென்றால், தினமும் காலை எழுந்து ஒரு மிகப் பெரிய பாறையை ஒரு குன்றின் உச்சிக்கு உருட்டிச் செல்வான். அவன் குன்றின் உச்சியை அடையும் பொழுது அந்தி சாய்ந்து விடும். அப்பாறை தன் எடையினால் தானாக உருண்டு குன்றின் கீழ் வந்து விடும்.அவன் களைத்துச் சலித்துக் கீழிறங்கித் தூங்கச் சென்று விடுவான்.
பின் மறு நாள் காலை இதே பாறையை இதே போல் மீண்டும் மலையேற்றுவான். பொருளற்ற வேலைகளை நையாண்டி செய்யும் இவனை பார்த்து ஒலிம்பிக் கடவுள் அல்லது கிரேக்க கடவுள்களின் தலைவன் என கூறப்பட்ட சீயஸ் என்பவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலில் சிசைபஸின் புராணக்கதையை விளக்க ஆல்பர்ட் காம்யூ முனைந்தார் பின்னர் மனிதன் பணம் சம்பாதிப்பதற்கு எவ்வாறு பேராசை கொள்கின்றான் என சிசைபஸின் கதையுடன் ஒப்பிட்டு டானிஷ் தத்துவவாதி சோரேன் கீர்க்கேகார்ட் விளக்கினார்.
ஆனால் இதையே பிரான்ஸ் கப்கா என்பவர், அரசியல் அதிகாரங்களில் ஈடுபடவே மனிதன் பேராசை கொள்கின்றான் என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மனிதன் அதிகாரத்திற்கும் பணத்திற்குமே பேராசை கொள்கின்றான் ஆனால் அவனால் சாதிக்க இயலவில்லை என்பது தத்துவ ஞானமே.
அத்துடன் தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரங்களை கொழும்பு அரசாங்கத்திடம் கேட்டு பெற்றுக் கொள்கின்றனர் ஆனால் சாதாரண மக்கள் இதை அனுபவிப்பதே இல்லை.
இரண்டு வாரங்களாக நான் இலங்கையில் இருந்தேன் அப்போது வடபகுதிக்கும் என்னுடைய பயணத்தை மேற்கொண்டிருந்தேன் அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் ஆகியோரை பல தமிழ் மக்கள் பாராட்டிக் கொண்டே இருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் பிரச்சினைகளை கையாள்வதற்காக அரசாங்கத்திற்கும் சாதாரண மக்களிற்கும் இடையில் இந்த உறுப்பினர்கள் இருவரும் ஒரு பாலத்தை ஏற்படுத்தி கொடுத்திருந்தனர்.
இதை தான் நாம் பிரிதிநிதித்துவ ஜனநாயகம் என கூறுவோம்.
மாகாணசபை தேர்தலின் போது வடக்கு பிராந்திய அபிவிருத்தி குறித்தே சில உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆனால் தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக அழுதுப் புலம்பிக் கொண்டே தான் இருக்கின்றனர்.
மக்களினுடைய அபிலாஷைகள் நிறைவேற்றப்படாமலேயே இருக்கின்றன. இதன் காரணமாகவே கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் முறைக்கேடான சம்பவங்கள் இடம் பெறுகின்றன.
வடக்கில் உள்ள பல குறைபாடுகளுக்கு சமூகம் மற்றும் அரசியல்வாதிகளின் தலைமைத்துவமே ஆகும்.
அரசியல்வாதிகளின் தலைமைத்துவம் தவறானது என்பதற்கு தெளிவான சிறந்த உதாரணம் யாழ்ப்பாணம் பல்லைக்கழகத்தில் இடம் பெற்ற மோதலே ஆகும்.
நான் அரசியல்வாதிகளை மாத்திரம் குற்றம் சாட்டவில்லை, தமிழ் சமுதாயங்களின் சில பிரிவுகள் கூட சாதாரண மக்களுக்கான வழிகாட்டல்களை காட்டவில்லை என்று கூறுகின்றேன்.
வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் பணத்தை கொண்டு கோயில்களை புனரமைக்கின்றனர், வெள்ளை பூசுகின்றனர் ஏன் இந்த ஆன்மீக பற்றை சாதாரண மக்களுக்கு காட்டுவதே இல்லை.
அனைவருக்கும் தெரியும் யாழ்ப்பாணம் மதுபாவனையில் முதல் மாவட்டமாக திகழ்கின்றது. இருப்பினும் போதை பாவனை குறித்து ஒவ்வொறு மூலை முடுக்கிலும் சுவரொட்டிகள் ஒட்டிக் கிடக்கும்.
தமிழ் அரசியல்வாதிகள் நாளாந்தம் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்குவதற்கே தயாராகி இருக்கின்றனர்.
சேற்றில் புரண்ட எருமை போன்று தமிழ் அரசியல் வாதிகள் தங்கள் வாழ்கையை எதிர்ப்பிற்காகவே பயன்படுத்துகின்றனர். ஆனால் தமிழரின் பிரச்சினை குறித்து பேசும் எந்த அரசியல்வாதியையும் நான் கண்டதில்லை.
அரசியல்வாதிகள் தாம் சாகும் வரை தங்களது இருக்கைகளை சூடாக வைத்திருப்பதற்கும் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்குமே உறுதியாக உள்ளனர்.
இது தான் எங்களுடைய வரலாறு...
சில அரசியல் வாதிகள் தகணம் மற்றும் கல்லறைகள் போன்று வெற்று வார்த்தைகள் கூறிக் கொண்டிருக்கும் பல அரசியல் வாதிகளை பார்த்திருக்கின்றேன். தமிழர்களுக்கு பயனளிக்காத வகையிலேயே 1927 ஆம் ஆண்டு டொனமூர் யாப்பு கொண்டு வரப்பட்டது.
தரம் குறைந்த ஜாதியை உடையவர்கள் மற்றும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என சர்வஜன வாக்குரிமைக்கு எதிராக குரல் கொடுத்த தலை சிறந்த தலைவர் பொன்னம்பலம் இராமநாதன்.
இந்த குழுக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கினால் அது தவறாகிவிடும் என்றும் இந்து மதம் வாழ்விற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் வாதிட்டார்.
அத்துடன் சுதந்திரத்திற்கு முன்னர் மற்றுமொரு தமிழ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் சோல்பரி யாப்பின் படி 50க்கு 50 என்ற பிரதிநிதித்துவத்தின் ஆட்சி இடம் பெற வேண்டும் என (அதாவது 50 சதவீதம் சிங்களவர்கள் என்றும் 50 சதவீதம் சிறுபான்மையினர் ஆட்சி செய்ய வேண்டும் என்றும்)கூறினார் ஆனால் அப்போது சிங்களவர்கள் சனத்தொகையில் 65 சதவீதம் காணப்பட்டனர்.
இலங்கையில் முதலாவதாக ஜி.ஜி.பொன்னம்பலம் மூலம் இனவாத சொல்லாட்சி குறித்தான கலவரம் நாவலப்பிட்டியில் தூண்டப்பட்டது.
அத்துடன் ஜி.ஜியின் உரையை தொடர்ந்து இடம் பெற்ற கலவரத்தை அடுத்து இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட எஸ் டபிள்யூ ஆர் டி பண்டாரநாயக்க இலங்கையின் தெற்கில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் சிங்கள மகா சபைகளை நிறுவ ஆரம்பித்து கலவரத்தை தூண்டி வந்தார்.
ஒரு அரசியல்வாதி என்ற முறையில் நான் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மீது குற்றம் சுமத்த மாட்டேன் இது ஜி.ஜியின் சொல்லாட்சி காரணமாகவே இடம் பெற்றது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் 1956 ஆம் ஆண்டு பொது தேர்தலின் போது கொண்டு வரப்பட்ட சிங்களவர்களை மாத்திரம் வைத்து செயல்பட்ட அந்த விவகாரம் சோகத்தை தழுவியது எனவே இதனை ஈடுசெய்ய பண்டா-செல்வா என்ற ஒப்பந்தத்தை கொண்டு வர முயன்றார்.
ஜி.ஜி பொன்னம்பலமும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் புத்த பிக்குகள் ஆகியவற்றிற்கு எதிர்ப்பை வெளிகாட்டினார். நாட்டில் 1958 ஆம் ஆண்டு தமிழருக்கு எதிராக இனக் கலவரம் இடம் பெற்றமையினால் தமிழரசுக் கட்சி இதற்கு எதிராக அகிம்சை முறையில் போராட்டங்களை முன்னெடுத்திருந்தது.
சிங்கள அரசியல்வாதிகளை திருப்திப்படுத்துவதற்கு நான் ஒரு போதும் ஆதரிக்க மாட்டேன், தமிழர்களினுடைய எழும்புக் கூடுகள் வேண்டும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். எங்கள் தவறுகளின் விளைவு கலவரம் மற்றும் கொந்தளிப்பு மட்டுமே.
பெரும்பான்மை இனவெறிக்கு புத்திசாலித்தனமாக எந்த பதிலடியும் வழங்கவில்லை ஆனால் அதற்கு பதிலாக தமிழ் இனவாத கொடிகளை உயரத்தில் ஏற்றினார்கள். முன்னர் தமிழரசுக் கட்சி நேர்மையான கட்சியாக காணப்பட்டது.
இதேவேளை நாட்டில் தமிழ் மக்களின் சுதந்திரத்தின் தீர்மானத்தை நிறைவேற்றும் முகமாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி உருவானது. நான் ஒரு சிங்கள தலைவனாக அல்லது சிங்கள குடிமகனாக இருந்திருந்தால் இவ்வாறான கதைகளை என்னால் உருவாக்கப்பட்டிருந்தால் அது என்னுடைய கசப்பான அனுபவமாகவே இருக்கும்.
அத்துடன் எந்த ஒரு முன் ஆயத்தமும் இல்லாமல் தமிழ் அரசியல் வாதிகளின் பிரிப்பு குறித்தும் அறிவிக்கப்பட்டிருந்தது. அமிர்தலிங்கம் ஈழத்தின் கோரிக்கை தொடர்பில் இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் தெரிவித்திருந்தார்.
பின்னர்,இளைஞர்கள் மூலம் மிகவும் நச்சுத்தன்மை உடையதாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வேலுப்பிள்ளை பிரபாகரனினால் சிறந்த தலைமைத்துவம் உருவாக்கப்பட்டது.
வேலுப்பிள்ளை பிரபாகரனினால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார். ஆனால் இது தொடர்பில் ஏற்கனவே நிறைய எழுதிவிட்டேன் அதனால் நான் மேலும் இதுப்பற்றி எழுத தேவையில்லை என்று நினைக்கிக்றேன்.
மக்கள் பொருளாதார அதிகாரத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அரசியல் உரிமைகளுக்கான முக்கியத்துவம் குறைந்துக் கொண்டு தான் செல்கின்றன. இலங்கையில் உள்ள மற்றைய சிறுபான்மை சமூகங்கள் ஒரு முன்னுதாரணமாகவே முன்னோக்கி வழி காட்டுகின்றன.
என்னால் தமிழ் தலைமைத்துவத்தை புரிந்துக் கொள்ளவில்லை. அவர்களின் மனதில் என்ன தான் இருக்கின்றது? அவர்கள் வட்டத்திற்கு வெளியில் சிந்திக்கின்றார்களா? என்னதான் நடக்கின்றது? என்னால் தமிழ் தலைமைத்துவம் பற்றி புரிந்துக் கொள்ளவே முடியவில்லை” என நோயல் நடேசன் சிறப்பாக தனது கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய ஈழத்தமிழ்ப்பரப்பிலும் புலம்பெயர் பரப்பிலும் அதிக சர்ச்சைக்குள்ளானவர் மட்டுமன்றி புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் ஒரு எழுத்தாளனான நடேசன், இவரே இந்த கட்டுரையை எழுதியுள்ளார்.