முதலில் பிரச்சினைக்கு தீர்வு பிறகுதான் நல்லிணக்கம்! ஐரோ.ஒன்றிய பிரதிநிதியிடம் முதலமைச்சர் எடுத்துரைப்பு


வடக்கில் ஒரு லட்சம் வரையான படையினர் நிலை கொண்டுள்ள நிலையில் அரசியல் ரீதியாக தமிழர் களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னர்தான் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடி யும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு பிரதிநிதியிடம் வட மாகாண முதலமைச்சர் எடுத்து ரைத்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு பிரதிநிதி ஜோடி கரஸ்கோ முனாஸ்க்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் முதலமைச்சர் அலுவலகத்தில் நடை பெற்றது. இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் முடி வடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 
இது தொடர்பாக அவர்  மேலும்  தெரிவிக்கையில், 

இலங்கையில் சமாதான ஏற்பாடுகள் தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளை ஆராயவும், எந்தவிதத்தில் சர்வதேச நாடுகள் எமக்கு உதவியாக இருக்க முடியுமென்பதனை அறிந்து கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பு பிரதிநிதி இங்கு வருகை தந்திருந்தார். எங்களுக்கிடையே புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்காக அரசு பலவிதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை நான் குறிப்பிட்டு காட்டியிருந்தேன். ஆனால் அவை இலங்கை அரசினால் தான் தோன்றித்தனமாக தயாரிக்கப்பட்டதேதவிர எம்முடன் கலந்தாலோசித்து நடத்தப்படவில்லை என்பதை எடுத்துக்கூறியிருந்தேன். 

இனங்களுக்கிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்கு முதல் அதற்குரிய அடிப்படை சூழல்  இருக்க வேண்டும். அந்த சூழல் இன்னும் இங்கு ஏற்படவில்லை என்பதை தெரிவித்தேன். 
உதாரணமாக தென்னாபிரிக்காவில்  அரசியல்ரீதியான பிரச்சினைகளை தீர்த்ததன் பின்னர்தான் உண்மைக்கும், நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. 
அவ்வாறு செய்தால் மக்கள் சேர்ந்து இது தொடர்பான நட வடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஆனால் எமது வட மாகாணத்தில் அப்படியான சூழல் இருக்கவில்லை. 

வடக்கில் ஒரு இலட் சம் வரையிலான படையினர் நிலைகொண்டிருக்கின்றனர், எமது நிலங்கள் இன்னும் அவர்கள் வசம் உள்ளது. அதில் இருந்து வரும் வரு மானத்தை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள்.

மக்களின் வாழ்வாதாரம் தடைபட்டு மக்கள் முகாம்களில் தங்கியுள்ளார்கள். வளங்கள் சூறையாடப் பட்டுள்ளன என்பது தொடர்பான பல விடயங்களை சுட்டிக்காட்டி இவ்வாறான சூழலில் நீங்கள் எவ்வாறு சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டுவரப் போகிறீர்கள் என்று யோசிக்க வேண்டும் என அவருக்கு தெரிவித்தேன். அதை அவர்  ஏற்றுக்கொண்டார் அது தொடர்பாக கலந்தாலோசிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 

புதிதாக தயாரிக்கப்படும் அரசியல் யாப்பினூடாக  நல்லிணக்கத்தை கொண்டுவர முடியுமா என கேட்டி ருந்தார். அதற்கு, நாம் எமது முன் மொழிவுகளை கொடுத்துள்ளோம். அதில் சமஷ்டி அரசியல் யாப்பு எமக்கு தேவை என தெரிவித்தேன். 

அதற்கு அவர்  சுயாட்சி அடிப்படையிலான தீர்வை நீங்கள் எட்ட முடியாதா என கேட்டிருந்தார். 
எதுவாக இருந்தாலும் எமக்கு தேவை எங்களை நாங்களே ஆளக்கூடிய ஒரு அரசியல் யாப்பு. அதற்கேற்றவகையில் செய்யக் கூடியவாறு சுயாட்சி இருந்தால் நன்மை பயக்கும். ஆனால் சில நேரங்களில் சட்டரீதியாக சமஷ்டி என்பதற்கு  கொடுக்கும் விளக்கங்கள் வேறுவிதங்களில்  கொடுக்கக் கூடும் என தெளிவுபடுத்தியிருந்தேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila