இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு பொதுமக்களிடம் கருத்தறியும் அமர்வு, வாழைச்சேனை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
1983ம் ஆண்டு ஜுலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு –பதுளை வீதிப் பகுதியை அண்டி வசிக்கும் ஊவா பெருந்தோட்டப்பகுதி மக்கள், செயலணிக்குழுவின் முன்னிலையில் தங்களின் குறைபாடுகளை முன்வைத்தனர்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த இராமசுந்தரம் மகேஸ்வரி
ஊவா மாகாணத்தின் பரணகம, வெலிமடப் பகுதியில் நாங்கள் சுமுகமாக வாழ்ந்து கொண்டிருந்த போதே 1983 ஜுலைக் கலவரம் ஏற்பட்டது.
நாங்கள் லயன் காம்பராக்களில் வாழவில்லை. எங்களுக்கு 05 ஏக்கரில் சொந்தமாக காணிகள் இருந்தன. நாம் விரட்டியடிக்கப்பட்டபோது எமது காணி, வீடு, ஏனைய சொத்து அத்தனையையும் அங்கிருந்த மிகவும் நம்பிக்கைக்குரியவர் என்று நம்பி ஒரு பௌத்த பிக்குவிடம் நாங்கள் ஒப்படைத்துவிட்டு வந்தோம்.
ஆனால், பின்னர் எமது அத்தனை சொத்துகளும் குறித்த பௌத்த பிக்குவால் அபகரிக்கப்பட்டதுடன், நிலைமை சுமுகமாகியதும் அங்கு நாம் திரும்பிச்செல்ல முற்பட்டபோது எமக்கு புலி என்று முத்திரையும் குத்தப்பட்டது' என்றார்.
எங்களுக்கு அங்கு இழப்பீடும் கிடைக்கவில்லை. இங்கு புனர்வாழ்வும் கிடைக்கவில்லை.' எனவும் அவர் மேலும் கூறினார்.
மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழ்ந்து வருகின்ற மலையக மக்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றியும் தங்களின் எதிர்பார்ப்புகளையும் மகஜராக நல்லிணக்கப் பொறிமுறைக்கான அமர்வின்போது கையளித்தனர்.
You may like this video
.