மகிந்தவிடம் மயங்கிய சிட்னி தமிழ் வியாபாரி!-அவுஸ்ரேலிய தமிழர்களுக்கு ஆப்பு

அவுஸ்திரேலியா நியுசவுத்வேல்ஸ் மாநிலத்தின் பென்டில்கில்லில் பணப்பரிமாற்றச் சேவை வியாபாரம் நடாத்தும் தொழிலதிபர் பிரதீபன் அவர்கள் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளரும் இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலைசெய்த போர்க்குற்றவாளியுமான மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து விருந்துபசாரம் மேற்கொண்டமை தொடர்பாக செய்தி தமிழ்கிங்டொத்தின் செய்திப்பிரிவுக்கு ஆதாரபூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் இந்தியாவிலிருந்து கலைஞர்களை அழைத்து நிகழ்ச்சிகளை நடாத்தும் மோகன் என்பவரும் கலந்துகொண்டுள்ளார் என அறியவருகின்றது.

தன்னை ஈழ ஆதரவாளனாக காட்டி தனது வியாபாரங்களை வளர்த்த பிரதீபனின் பிரதான வாடிக்கையாளர்கள் தமிழர்களே. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பென்டில்கில் நகரில் பணப்பரிமாற்றச் சேவை வியாபார நிறுவனம்மட்டுமன்றி இறைச்சிக்கடையொன்றையும் மீன்கடையொன்றையும்  சொந்தமாக நடாத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களால் வாழ்வுபெற்று போர்க்குற்றவாளிகளுடன் ஒட்டி உறவாடு மட்டுமல்லாது அவுஸ்ரேலியாவிலிருந்து தமது உடலுழைப்பில் தாயக உறவுகளுக்கு அனுப்பப்படும் பணப்பரிமாற்ற விபரங்களையும் இவர் சிங்கள ஆட்சியாளர்களுக்கு வழங்கிவருவதாகவும் இது தாயக மற்றும் அவுஸ்ரேலிய தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தானசெயற்பாடு என அங்கிருக்கும் தமிழ் அமைப்புக்கள் குற்றம் சாட்டியுள்ளன. இவர்போன்றவர்களின் வியாபார நிறுவனங்களை தமிழர்கள் புறக்கணிப்பதே இவர்களைப் போன்றவர்களுக்கு பாடமாக அமையும் 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila