வடமாகாண அமைச்சர்கள் விடயத்தில் கல்வி அமைச்சர் குருகுலராஜாவை காப்பாற்றும் நோக்கினில் தமிழரசு கட்சி மும்முரமாக செயற்படுவதாக ஜங்கரநேசன் ஆதரவு தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
வடமாகாணசபை அமைச்சர்கள் பற்றிய விசாரணை அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு மூல காரணமாக இருந்த தமிழரசுக்கட்சி தற்போது பதுங்க தொடங்கியுள்ளது.கல்வி அமைச்சர் ராஜினாமா புதியதொரு திருப்பமாக பார்க்கப்படுகின்றது.கல்வி அமைச்சர் விவகாரத்தினால் சீற்றமடைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இது தொடர்பினில் தமிழரசு தலைவர் மாவையிடம் காட்டமான கருத்துக்கள் சிலவற்றினை முன்வைத்துள்ளதாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையினில் ஆணைக்குழுவின் அறிக்கை மூலம் முதலமைச்சருடன் நெருக்கமாக இருக்கும் ஜங்கரநேசனை வெளியேற்ற முற்பட்ட சுமந்திரன் அணி தொண்டர்கள் வலைக்குள் குருகுலராஜாவும் அகப்பட்டமையால் அதிர்ச்சியடைந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
இதனிடையே விசாரணைக்குழுவினில் வாக்குமூலமளித்த பலர் தற்பேர்து பல்டியடிக்க தொடங்கியுள்ளனர்.
வடமாகாண விவசாய அமைச்சரின் தலையீடு அதிகமாக இருந்தது, அவரது அழுத்தத்தால் பதவி விலகினேன், யாழ்கோ தலைவர் நியமனத்தில் அமைச்சரின் தலையீடு பற்றி அப்போதைய கூட்டுறவு ஆணையாளராக இருந்த மதுமதி சாட்சியமளித்ததாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தான் கூறாதவற்றை விசாரணை அறிக்கையில் கூறியதாக பதிவிடப்பட்டுள்ளதாக மதுமதி கூறியுள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் விக்னேஸ்வரனிற்கும் அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே யாழ்.மாவட்ட உள்ளுராட்சி ஆணையாளராக இருந்த மதுமதி அவரது கணவரினால் நடத்தப்பட்ட முறைகேடுகள் காரணமாக பந்தாடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comments


