இந்த கூட்டம் தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச் செயலாளர் திரு.ச.வி.கிருபாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது. ஐ.நாவின் சர்வதேச நிலைக்கும் விதிக்குமான நிபுணராக ஆல்பிரட் சயஸ் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து கடமையாற்றுகின்றார். ஈழத்தமிழர் தொடர்பான இவரது கூற்று ஐ.நாவின் பொதுச்சபை மற்றும் பாதுகாப்புச்சபை வரை ஒலிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.மேலும், ஈழத்தமிழர் விவகாரத்தில் ஐ.நாவின் நிபுணர் ஒருவர் கலந்துகொண்டு உரையாற்றியமை சரித்திரத்திலேயே இது முதன்முறையாகும்.இக்கூட்டத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், கல்விமான்கள், சர்வதேச ஊடகவியலாளர்கள், அரச பிரதிநிதிகள், அரச சார்பற்ற பிரதிநிதிகள் மற்றும் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். |
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம் நியாயமானது! - ஜெனிவா கூட்டத்தில் ஐ.நா விசேட பிரதிநிதி
Add Comments