“பசில் ராஜபக்சவே சில் துணிகளை விநியோகிக்குமாறு உத்தரவிட்டார். அப்படி செய்வது சட்டத்திற்கு விரோதமானது என நான் தெளிவுப்படுத்த முயற்சித்த போது வாழ்நாளில் கேட்காத தூஷன வார்த்தைகளால் திட்டினார்.இதன் பின்னர் தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவின் அன்றைய தலைவரான லலித் வீரதுங்கவிடம் இதனை கூறினேன்.இது குறித்து லலித் வீரதுங்க, மகிந்த ராஜபக்சவிடம் கேட்டுள்ளார். மகிந்த சற்றும் யோசிக்காது பசில் கூறுகிறார் தானே சில் துணிகளை விநியோகம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும எடுத்து விட்டே நாங்கள் சில் துணிகளை விநியோகித்தோம். சகல குறிப்புகளை நாங்கள் எழுதினோம்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அனுமதியுடன் சில் துணிகளை விநியோகிப்பதாக நாங்கள் குறிப்புகளில் எழுதினோம். எனினும் இறுதியில் எங்களுக்கே சிறைக்கு செல்ல நேரிட்டுள்ளது. உயர்மட்டத்தில் வழங்கிய உத்தரவையே நாங்கள் செயற்படுத்தியதாக நீதிமன்றத்தில் கூறினோம். எனினும் நீதிமன்றம் அதனை ஏற்கவில்லை. லலித் வீரதுங்கவையும் என்னையும் பொறியில் சிக்கவைத்து பசில் ராஜபக்சவையும் மகிந்த ராஜபக்சவையும் நீதிமன்றம் காப்பாற்றியுள்ளது. நீதி, நியாயம் என்றால் இதுதானா?.மகிந்த ராஜபக்ச இங்கு எங்களை பார்க்க வந்து விட்டு தற்போது சும்மா பைலா பாடுகிறார். இன்னும் ஆறு மாதங்களில் நாங்கள் ஆட்சியமைப்போம் அப்போது பெருந்தொகை இழப்பீடு வழங்கி விடுதலை செய்வோம் என்று மகிந்த ராஜபக்ச கூறினார். அவர்கள் அரசாங்கத்தை அமைப்பார்களோ இல்லையோ, இன்னும் ஆறு மாதங்களில் மகிந்தவும் பசிலும் வெலிகடைக்கு வந்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.மகிந்த வந்து பொய்வது கூறி எமக்கு ஆறுதல் தருகிறார். பசில் வரும் வரையில் நாங்கள் காத்திருக்கின்றோம். அப்போது பசிலுக்கு தெரியாத தூஷனத்தை அவருக்கு கற்றுக்கொடுப்போம் என அனுஷ பெல்பிட்ட தனது நண்பர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது. |
சி்றைவாசம் அனுபவிக்க பசில் ராஜபக்சவே காரணம்! - அனுஷ பல்பிட்ட
Add Comments