தமிழ் அரசியல்கைதிகளது வழக்குகளை தென்னிலங்கை சிறைகளிற்கு மாற்றும் முயற்சியினை இலங்கையின் சட்டமாஅதிபர் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது.அவ்வகையினில் வவுனியா மேல்நீதிமன்றினில் விசாரணைகளை எதிர்கொண்டிருந்த மதியரசன் சுலக்சன் உள்ளிட்ட மூவரது வழக்குகள் அவர்களது எதிர்ப்புக்களினையும் தாண்டி அனுராதபுரம் சிங்கள மேல்நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு வழக்குகளை மாற்றம் செய்தவற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அண்மையினில் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை தடுத்துவைக்கப்பட்டுள்ள அனராதபுரம் சிறைச்சாலையினில் மேற்கொண்டிருந்தனர்.எனினும் நீதிபதியின் உறுதியுரையினையடுத்து போராட்டத்தை அவர்கள் விலக்கியிருந்தனர்.இந்நிலையினில் தற்போது வழக்கினை சத்;தம் சந்தடியின்றி அனுராதபுரம் மேல்நீதிமன்றிற்கு சட்டமா அதிபர் திணைக்களம் மாற்றியுள்;ளது.
இதனிடையே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்களின் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 73 பேரின் வழக்குகளை துரிதமாக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் என்னிடம் உறுதியளித்துள்ளார்.
தான் அவற்றை நாளாந்தம் அடிப்படையில் விசாரணை செய்யுமாறு அழுத்தம்கொடுக்கப்போவதாகவும், வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கவேண்டிய தேவையேற்பட்டால் இரண்டு வாரங்களுக்கு மேற்படாது எனவும்தெரிவித்துள்ளார். எனவே, இந்த வழக்கு விசாரணைகள் அனைத்தும் விரைவில் முடிவுக்கு வரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.