சரியான தீர்ப்பை வழங்குவதற்கு கடவுள் தந்த சந்தர்ப்பம்

எம் உயிரினும் மேலான தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவிருக் கின்றது.

தேர்தல் களம் இறங்கியுள்ள அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வீடு வீடா கச் சென்று தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
தேர்தலில் போட்டியிடுவது என்பது அனை வருக்கும் இருக்கக்கூடிய உரிமை. எனவே தேர்தலில் யார் போட்டி போட்டாலும்  அது தொடர் பில் யாரும் குறை காணத் தேவையில்லை.

அதேநேரம் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதென்றும் இல்லை.

எனவே மக்கள் வழங்குகின்ற தீர்ப்புத்தான் இங்கு முக்கியமானது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள்.

ஆக, நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கு இறைவன் தந்த ஒருபெரும் சந்தர்ப்பம் என் பதை எவரும் மறந்துவிடக்கூடாது.
தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி இன்றுவரை மக்களின் மனங்களில் எழுமாக இருந்தால், அதற்கான சரியான பதி லைத் தேடி அறியும் கடமையும் மக்களிடமே உள்ளது.

அந்த வகையில், முன்னைய தேர்தல்களில் நாம் வாக்களித்தவர்கள் எங்களுக்குச் செய் தது என்ன?
எங்கள் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை; குறைகளை போக்குவதற்காகக் களத்தில் நின்று சேவையாற்றினார்களா? வன்னி யுத் தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்த வும் அவர்களுக்கு உதவவும் இவர்கள் செய்த பணி என்ன?

பாராளுமன்றத்துக்குச் சென்ற இவர்கள் எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பாராளு மன்றத்தின் பிரதிநிதித்துவத்துக்கான தங்க ளின் கடமைகளை முழுமையாகவும் திறமை யாகவும் செய்தனரா?

தமிழர் தாயகத்தின் அபிவிருத்திக்காக இவர்கள் கொண்டு வந்த கைத்தொழிற்சாலை கள் எத்தனை, அவை எவை - வழங்கிய வேலை வாய்ப்புக்கள் யாவை - சுயதொழில் முயற்சி களுக்கு இவர்கள் செய்த உதவிகள் என்ன?

இடைக்கால வரைபுத் திட்டத்தைத் தயாரிக் கும்போது தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதில் இவர்கள் எடுத்த நடவடிக்கை கள், மக்களைத் தேடிச் சென்று நடத்திய சந்திப்புக்கள், இவர்களின் இத்தகைய கூட்டங் களில் நீங்கள் பங்குபற்றிய சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா?

தமிழினத்துக்கான தீர்வு விடயத்தில் சர்வ தேச சமூகத்தை எமக்குச் சாதகமாக்க இவர் கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா? அல்லது அரசுடன் சேர்ந்து நின்று எங்கள் இனத்துக்கு பாதகம் செய்தார்களா? என்ற கேள்விகளுக்கு விடை தேடுங்கள்.
அதேபோல தேர்தலில் போட்டியிடும் அரசி யல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் இத்தேர் தலில் வெற்றி பெற்றால்,

அவர்கள் என்ன செய்வார்கள். தமிழினம் நன்மை பெறுமா என்ற கேள்விகளுக்கும் விடை தேடுங்கள். உங்களுக்கான பதிலை உங்கள் மனச்சாட்சி முன்மொழியும்.
அதற்கேற்றாற்போல் உங்கள் வாக்குகளை வழங்குங்கள். இது கடவுள் தந்த நல்ல சந்தர்ப்பம்.
எங்கள் அரசியல்வாதிகள் திருந்துவதற் கும் திருத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தலை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்பதை உணர்ந்து உங்கள் தீர்ப்பை எழுதுங்கள். எல் லாம் நன்மையாகும்
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila