நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் வடக்கு முதல்வர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவை களமிறக்குவதற்கு கட்சியின் பெருமளவானவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
வடக்கின் தற்போதைய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தேர்தல் காலங்களில் தமிழரசுக்கட்சிக்கு எதிராக அறிக்கைவிடுகின்றமை, தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து செயற்படுகின்றமை, தமிழரசுக்கட்சிக்கு கட்டுப்படாத வகையில் செயற்படுகின்றமை போன்ற காரணங்களை காட்டி அவரை அடுத்த முதலமைச்சர் வேட்பாளராக நியமிப்பதில்லை என்று கட்சியில் பெருமளவானவர்கள் தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் கடந்த தேர்தலின் போது பரிசீலிக்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டிருந்த மாவை சேனாதிராஜாவை மீண்டும் தூசு தட்டி தேர்தலில் களமிறக்க தீர்மானித்திருப்பதாக தெரியவருகிறது.
இதன் தொடராக மாவை சேனாதிராஜா தன்னுடைய பரிவாரங்களுடன் மாகாணசபைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளை தற்போதே முன்னெடுக்கத் தொடங்கியிருப்பதாக தெரியவருகிறது.
இதன் ஒருகட்டமாக கிளிநொச்சிக்கு நேற்று பயணம் மேற்கொண்ட மாவையும் அவருடைய குழுவினரும் உதவித்திட்டங்களை கையளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
இருந்தபோதிலும் தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி முக்கிஸ்தர் மாவை சேனாதிராஜாவின் பயணத்தின் போது பங்கெடுத்திருக்கவில்லை என்றும் தெரியவருகிறது.