ஏப்ரலுக்கு அடுத்தது - மே... ஜூனுக்கு முந்தியது - மே...

மன்னர் சபைக்கு ஒரு குடியானவன் வரு கிறார். அவர் தன்னுடன் ஆடு ஒன்றையும் கொண்டு வருகிறார்.

மன்னரை வணங்கிய அந்தக் குடியான வன் மன்னர் பிரானே! இது எனது ஆடு. இத ற்கு நன்கு பேசத் தெரியும் என்று கூறுகின்றார்.

இதனை ஆச்சரியத்துடன் கேட்ட மன்னன் எங்கே உனது ஆட்டைப் பேசச் சொல்லு பார்க் கலாம் என்றார்.

உடனே அந்தக் குடியானவன் தன் ஆட்டைப் பார்த்து ஆடாரே! ஏப்ரல் மாதத்துக்கு அடுத்த மாதம் என்ன? என்று கேட்க; அதற்கு ஆடு மே... என்றது.

ஆடாரே! ஜூன் மாதத்துக்கு முதல் மாதம் எது எனக் குடியானவன் கேட்க, அதற்கு ஆடு மே... என்றது.

மன்னர் பிரானே பார்த்தீர்களா எனது ஆடு பேசுகிறது என்றான் குடியானவன். இவற்றை யயல்லாம் உற்று அவதானித்துக் கொண்டி ருந்த மந்திரி குடியானவனைப் பார்த்து உன் ஆட்டிடம் நான் கேள்வி கேட்கிறேன் என்று கூறியபடி; ஆடாரே! ஜனவரிக்கு அடுத்த மாதம் எது என்று கேட்டார். உடனே ஆடு மே... என்றது.

இப்போது ஆட்டின் இயல்பு தெரிந்தாயிற்று.

இதை நாம் கூறும்போது அட பெரியதொரு கதையைக் கூறிவிட்டீராக்கும் என்று நீங்கள் முணுமுணுப்பதும் நமக்குத் தெரிகிறது.

எனினும் இந்தக் கதை புதியதோ பெரியதோ அல்ல. மாறாக இந்தக் கதைக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கருத்துக்கும் தொடர்பு உண்டு.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை இலங் கைத் தூதுக்குழு அண்மையில் சந்தித்திருந்தது.

இச்சந்திப்பின்போது இந்தியா எப்போதும் உங்களுடன் இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியதாக அந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் தெரிவித்துள்ளார்.

இங்கு, எப்போதும் உங்களுடனேயே இருப் போம் என்று பிரதமர் மோடி கூறியது யாருக் கானது.

இலங்கைத் தூதுக்குழுவிடம்; எப்போதும் இந்தியா உங்களுடனேயே இருக்கும் என்றால், அது இலங்கை அரசுக்குச் சார்பானது என்று பொருள்படும்.

தவிர, பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒருமுறை இலங்கைக்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்துக்கும் வந்திருந்தார்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி யாழ்ப்பாணப் பொது நூலக மண்டபத்தில் உரையாற்றும்போது, இந்தியா உங்களுடனேயே இருக்கும் என்றார்.

இது தமிழ் மக்கள் மற்றும் தமிழ்த் தலை வர்கள் முன்னிலையில் கூறியமையால் இது எங்களுக்குச் சாதகமானது என்று பொருள்படும்.

ஆக, ஏப்ரலுக்கு அடுத்தது மே என்பதும் ஜூனுக்கு முன்னையது மே என்பதுமான ஆட் டின் இயல்பும் “எப்போதும் உங்களுடன் நாங் கள் இருப்போம்” என்ற பிரதமர் மோடியின் வார்த்தை இயல்பும் ஒத்ததன்மை கொண்டவை என்பதை மட்டுமே இப்போதைக்கு நாம் கூறமுடியும். 
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila