இரு வீட்டாரும் சேர்ந்துபோய் திருமணப் பொருத்தம் பார்த்தால்...

யாழ்ப்பாணத்தில் பிரபலமான சோதிடர் ஒரு வர் இருந்தார். திருமணப் பொருத்தம் பார்ப் பதற்காகப் பலரும் அவரை நாடி வருவது வழக்கம்.
இவ்வாறு வருகிறவர்களிடம் அவர் முத லில் கேட்பது இரு வீட்டாரும் வந்திருக்கிறீர்களா என்பதுதான்.

மாப்பிள்ளை வீட்டாரும் பெண் வீட்டாரும் வந் திருந்தால் பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்யலாம் என்று சொல்லி விடுவாராம் அந்த சோதிடர்.

இதுபற்றி சிலர் அவரிடம் வினவியபோது, பொருத்தம் பார்ப்பதற்கு ஆண், பெண் வீட்டார் சேர்ந்து வந்திருந்தால் அவர்களிடம் ஒற்றுமை இருக்கிறது. மனப்பொருத்தம் இருக்கிறது.
திருமணம் என்பது கிரகங்களின் பொருத் தத்தில் தங்கியிருக்கவில்லை. மனப் பொருத் தம் புரிந்துணர்வு என்பவற்றில்தான் திருமணத் தின் எதிர்காலமே தங்கியிருப்பதால், இருதரப் பும் சேர்ந்து பொருத்தம் பார்க்க வருகின்ற போது பொருத்தம் பார்க்காமலே திருமணம் செய்துவிடலாம் என்று கூறி விடுகிறேன் எனப் பதில் அளித்தாராம்.

அட, இந்த இடத்தில் திருமணப் பொருத்தம் எதற்கானது என்று நீங்கள் யாரேனும் கேட் டால், திருமணப் பொருத்தத்தில் ஏதேனும் தோசம் இருந்தால் அதை சோதிடரிடம் தனி யாகச் சென்று கேட்பதுதான் நல்லது.
இரு வீட்டாரும் சேர்ந்து சென்றால், சோதி டரிம் எதையும் கேட்க முடியாமல்போய்விடும்.

அதாவது மாப்பிள்ளையின் சாதகம் பற்றி பெண் வீட்டார் கேட்டால், அது ஆண் பகுதிக்கு மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். 
அதேபோல பெண்ணின் சாதகம் பற்றி ஆண் வீட்டார் விசாரித்தால், அது பெண் வீட்டுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.

இதற்காகத்தான் தனித்தனியாகச் சென்று சோதிடரைச் சந்திப்பது சாதகப் பிரச்சினை களைச் சொல்லவும் தோச பரிகாரத்தை சோதி டரிடம் கேட்டறியவும் உதவும்.
இதை நாம் ஏன் சொல்கிறோம் என்றால், சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தர், அமைச் சர்களான நிமால் சிறிபால டி சில்வா, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், றிசாத் பதியூதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவொன்று டில்லிக் குச் சென்று அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளது.

இந்தக் குழுவில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தரும் சென்றிருந்தாராயினும் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பிரதமர் மோடியிடம் அவர் குறிப்பிட்டு எதையும் கூற முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.
சபாநாயகர் இருக்கும்போது, சிங்கள - முஸ்லிம் அமைச்சர்கள் பிரசன்னமாகியிருக் கும் நிலையில், இலங்கை அரசாங்கம் தான் கூறிய உத்தரவாதம் எதனையும் நிறைவேற்ற வில்லை என்று எப்படிக் கூறமுடியும்.

ஆக, இவற்றைக் கூற முடியாமல் இருக்கும் போது சிங்கள தமிழ் முஸ்லிம் தரப்பினர் எல் லோரும் ஒன்றாக வந்திருப்பதால், பிரச்சினை கள் சமாளிக்கப்பட்டு விட்டன என்று பிரதமர் மோடி கருதுவாரேயன்றி, தமிழர் பிரச்சினை தொடர்வதாக அவர் நினைப்பதற்கான சந்தர்ப் பம் அறவே இல்லை என்பதுதான் யதார்த்தம். 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila