கிளி. பொதுச் சந்தையில் ரவுடிக் கும்பல் அட்டகாசம்-இருவர் பொலிஸாரால் கைது

கிளிநொச்சி பொதுச் சந்தை யினை நேற்று மாலை 6மணி முதல் 6.45 மணி வரை  தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது ரவுடிக்கும்பல் ஒன்று. சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல்  சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக  தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் வந்திற ங்கிய இருபது பேர் அளவில் கொண்ட இளைஞர் குழு ஒன்று எங்கேயடா குமார் என்று கேட்டபடி கையில் கத்தி, இரும்புகள், இரும்பினால் தாக்குதல்களை மேற்கொள்ள வென செய்யப்பட்ட கூரிய ஆயுதங்கள் என்பவற்றுடன் அங்கும் இங்கும் ஓடித்திரிந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

சந்தையின் வியாபாரிகள், மற்றும் சந் தைக்கு வரும் பொது மக்கள் என  அனை வரையும் தாக்கியுள்ளனர்.
 
கைக் குழந்தை யுடன் பொதுச் சந்தைக்கு வந்த பெண்ணை யும் தாக்குவதற்கு முற்பட்ட போது அவர் அல றியபடி சந்தையின் பின்பக்கமாக ஓடி தப்பி விட்டார்.

இந்த நிலையில் மேலும் சிலர் வருகை தந்த போது இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதன் பின்னர் சந்தை யில் நின்றவர்கள் மீது குறித்த ரவுடிக் கும்பல் தாக்குதல்களை மேற்கொண்டது.

 பொலிஸார் சந்தைக்கு விரைந்த போது குறித்த ரவுடிக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.

இருந்தபோதும் இருவர்  மட க்கி பிடிக்கப்பட்டுள்ளனர். பிடிக்கப்பட்ட ஒரு வருக்கு தலையில் பலத்த காயம் எனத் தெரிவிக்கப்படுவதோடு. அவர் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila