“சுங்க ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அதனை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியே இவ்வாறு போராட்டம் நடத்தப்படவுள்ளது.”
இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அந்த சங்கத்தின் தலைவர் இராஜேந்திரன்,
“சுங்க வேலைநிறுத்தம் காரணமாக நாங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளோம். கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதால் அதில் உள்ள உணவுப்பொருட்கள் பழுதடையும் அபாயம்.
மறுபுறம் கொள்கலன் ஒன்றை விடுவித்து அடுத்தது வர தாமதமாகும்போது எங்கள் வர்த்தகர்களுக்கு நிதிப்பிரச்சினை வேறு. இதனால் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் நிலைமை.
மறுபுறம் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் கூட ஏறலாம். எனவே எங்களையும் மக்களையும் கருத்திற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை வலியுறுத்தி இந்த கடையடைப்பை செய்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.