ஏற்கனவே இராணுவ முகாம் ஒன்றில் இரகசியமாக தாக்குதல்களுக்காக ஒரு குழுவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக பல்வேறு இராணுவ முகாம்களிலருந்து 400 முதல் 500 பேர் வரையில் தெரிவு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதன் ஊடாக பயங்கரவாதம் தலைதூக்கியதாக பிரச்சாரம் செய்து, இனவாதத்தை விதைத்து ஆட்சியை கைப்பற்றுவதே முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் திட்டமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், இந்த சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் இராணுவத்தைச் சேர்ந்தவர்களே தகவல்களை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்தை பாதுகாக்க பல்வேறு தரப்பினரும் இணைந்து செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையில் ஊழல் மோசடிகள் தொடர்பில் 2000த்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். சூழ்ச்சித் திட்டம் தொடர்பில் அமைச்சரவையிடம் சமர்ப்பித்துள்ளதாக விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.