தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள். தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றவர்கள் என்ற ஒரு நல்ல செய்தியினை நடந்து முடிந்த பல தேர்தல்களில் நிலைநாட்டியுள்ளனர்.. இதற்கு சிறந்த சான்றாக தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் விதிவிலக்கல்ல என்பது அனைவரும் அறிந்த உண்மை.
இலங்கை வரலாற்றில் தற்போதைய நிலைமையினை மிகவும் உன்னிப்பாக அவதானித்து சாதகமாக காய்நகர்த்தி அரசியல் நடாத்தி வருகின்றமை, த.தே.கூட்டமைப்பின் அரசியல் முதிர்ச்சி போற்றுவதற்கு உரியது. இதில் குறிப்பாக மதிப்புக்குரிய சம்பந்தன் ஐயா அவர்களின் பங்கு அளப்பரியது என்று கூறினால் மிகையாகாது.
இருந்தும் தற்போது எழுந்துள்ள கிழக்கு மாகாண சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது சம்பந்தமான பிரச்சினைகளில். மிக வித்தியாசமான முறையில் சென்று கொண்டிருக்கின்றதனை தற்போதைய கள நிலவரங்களை வைத்து அவதானிக்க முடிகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒருபோதும் பதவிகளுக்கு, கதிரைகளுக்கும் அடிபணியாது செயற்படுகின்றமையே இன்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலைத்திருப்பதற்கான நியாயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
அந்த வகையில் இன்று கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைப்பது சம்பந்தமான கருத்து வெளியாகியதை அவதானிக்க முடிகின்றது. இது சம்பந்தமாக மக்கள் மத்தியிலும் அரசியல் ஆர்வலர்கள் மத்தியிலும் பல தரப்பட்ட எண்ணப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் பின்னார் தமிழ்த் தேசியக் கூட்டைப்பின் தலைவர் அவர்கள் முஸ்லிம் காங்கிரசிடம் அனைத்து பதவிகளையும் தருவதாக கூறி மாகாண சபை ஆட்சியமைக்க கோரிய போதும் அதனை உதாசீனம் செய்ததை இன்னும் மக்கள் மறக்கவில்லை.. இந்த நிலையில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதற்கு மக்களின் விருப்பம் இன்மை காணப்படுவதில் தவறில்லை.
எம்மை உதாசீனம் செய்தவர்களின் பின் சென்று ஆட்சி அமைப்பதைவிட எதிர்க்கட்சியில் இருப்பது சிறந்ததாகும் என ஏன் தமிழ் மக்கள் கருதமுடியாது? அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுகின்ற போது அவர்கள் மாற்றத்தின் பக்கம் செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன ஆதாரம்? நிலையில்லாதவர்களுக்கு பின் சென்று நிலையான எமது கொள்கையை ஏன் மாற்றியமைக்க அல்லது விட்டுக் கொடுக்க வேண்டும்?.
இவர்கள் கிழக்கு மாகாண சபையில் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சியை மேற்கொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட(குறிப்பாக அம்பாறை மாவட்ட மக்கள்) தமிழ் மக்களின் தொகை எவ்வளவு தெரியுமா? இந்நிலையில் அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என்று தற்போது விடாப்பிடியில் இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இவற்றினை தடுத்து நிறுத்தியிருக்கலாம் தானே போன்ற பல ஆதங்க வினாக்கள் மக்கள் மத்தியில் எழுகின்றது.
சொல்லப் போனால் இதைபோன்று பல வினாக்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம் அதற்கான தேவை தற்பொழுது இல்லை. எனவே இந்த விடயத்தில் அனைத்து மக்களின் கருத்தினையும் கவனத்தில் எடுத்து தீர்மானம் மேற் கொள்ள வெண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை ஏற்றுக் கொண்ட தன்மான தமிழ் மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
தமிழ்த் தலைவரின் கோரிக்கையினை உதாசீனம் செய்தமை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கருத்தினை உதாசீனம் செய்ததற்கு சமம் என்பதனால் இக்கருத்தினை முன்வைக்கின்றோம். ஒவ்வொரு தமிழனும் இன்றும் தன்மானமுள்ள தமிழனாகவே இருந்து செயற்படுகின்றான்.
அவ்வாறு இருக்கும் போது தமிழ் மக்களின் கருத்துக்களுக்கு முக்கிய இடம் கொடுத்து தமிழர்களின் குரலாக ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கும் த.தே.கூட்டமைப்பினை பலப்படுத்த வேண்டியது தற்போதுள்ள தலைமையின் பொறுப்பாகும் என்பதுதான் அனைத்து தன்மானமுள்ள தமிழனின் கோரிக்கையும் கூட.
இதனை கருத்தில் எடுப்பாரா? த.தே.கூட்டமைப்பு சொன்ன சொல்லில் இருந்து சற்றும் பிசகாமல் இம்முறை ஜனாதிபதி தேர்தலை வடகிழக்கில் உள்ள தமிழர்கள் சந்தித்தார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம்.
இதனை கருத்தில் எடுத்து எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபையில் ஆட்சி அதிகாரத்தினை எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பதனை ஒவ்வொரு தமிழனும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை அனைத்து தமிழர்கள் மத்தியிலும் காணப்படும் பேரவாவாகும்.
இதனை த.தே.கூட்டமைப்பின் தலமைகள் நிச்சயம் கருத்தில் எடுப்பார்கள் என்ற நம்பிக்கை வடகிழக்கு மக்களை பொறுத்தவரையில் புரையோடிக் காணப்படுகின்றது. கிழக்கு மாகாண சபையில் எவ்வாறான முடிவினை எதிர்காலத்தில் த.தே.கூட்டமைப்பு எடுக்கப் போகின்றது? அதனால் தமிழ் மக்களுக்கு என்ன நியாயம் கிடைக்கப் போகின்றது? என்பதனை பொறுத்திருந்துதான் பார்ப்போம் என்ற நம்பிக்கையின் ஏக்கத்தில் தமிழ்மக்கள்.