அனந்தியை நீக்கவேண்டாம் வலிமேற்கு பிரதேச பொதுமக்கள் தமிழரசு கட்சிக்கு எச்சரிக்கை!

இலங்கைத்தமிழரசுகட்சியின் தலைவர் அவர்களே!!

 தமிழ்மக்களாகிய நாம் வார்த்தைகளால் வர்னிக்கமுடியாத அளவு வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கி என்றோ ஒருநாள் எமது நியாயமான போராட்டம் வெற்றிபெறும் சுதந்திரக்காற்றினை நாமும் சுவாசிக்கலாம் என்று ஆவலோடும் ஒரு பாரிய எதிர்பார்ப்போடும் காத்திருக்கின்றோம்.

ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் தமிழர்களுக்காக பேசும் ஒரு சக்தியாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை மட்டுமே தமிழ்மக்கள் நம்புகின்றார்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றால் அதன் அர்த்தம் என்ன?

அதற்கும் எத்தனை கட்சிகள் இருக்கின்றன அந்த கட்சிகளுக்குள் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி அடிமட்ட பாமர மக்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் தம்ழ்த்தேசியக்கூட்டமைப்பு எமது உரிமைக்காகப்போராடும் எமக்காக குரல்கொடுக்கும் என்பதில் மட்டும் அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர் ஆனால் அந்த நம்பிக்கையினை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் கடந்தகால செயற்பாடுகள் கேள்விக்குறியாக்கியுள்ளது இதனை மறுத்துவிட உங்களால் முடியாது மேலும் தற்போது தமிழரசுகட்சியில் இருந்து அனந்தி சசிதரன் அவர்களை நீக்கியுள்ளீர்கள் அதற்கான முக்கியமான காரணமாக அதாவது குற்றச்சாட்டாக நீங்கள் முன்வைப்பது கட்சியின் கட்டுப்பாட்டினை மீறினார் என்பதுதான், எனவே தமிழரசு கட்சியின் கட்டுப்பாடு என்பது தேசியம், சுயநிர்ணயம், சுயாட்சி என்பதைப்பற்றி பேசக்கூடாது என்பதா?

காரணம் கடந்த ஜனாதிபதித்தேர்தலின்போது அனந்தி சசிதரன் அவர்கள் தான் தேர்தலை நிராகரிப்பதகவும் அதற்காக அவர் சில நியானமான கருத்தினையும் முன்வைத்திருந்தார் அது அவரது தனிப்பட்ட கருத்து .அவரது மனக்குமுறல் மன வேதனை நேரடியாக போரால்ப்பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி பெண் எனவே அவர் இந்த சிங்கள ஆட்சியாளர்களால் நேரடியாக பல துன்பங்களை அனுபவித்திருக்கின்றார், இன்றுவரை அச்சுறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றார் எனவே அவர் பாதிக்கபட்டவள் என்ற முறையில் தனது தனிப்பட்ட கருத்தாக அதனை பதிவு செய்தாரே தவிர யாரையும் வாக்களிக்கவேண்டாம் என்று கூறவில்லை எனவே இதற்காக அவரை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன?

இதன் அரசியல் பின்னனி என்ன? இது முற்றுமுழுதாக கட்சிக்குள் இருக்கும் ஒரு சிலரது விருப்பேயாகும் இரண்டொருவருக்குப்பிடிக்கவில்லை என்பதற்காக என்பதாயிரத்துக்கும் அதிகமான மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநியை வெளியேற்றுவது என்பது அந்த எண்பதாயிரம் மக்களின் முகத்திலே கரிபூசிவிடுவதற்கு சமனான ஒன்று மேலும் அனந்தி சசிதரன் அரசியலுக்கு வரமுன்பே காணமல்ப்போன உறவுகளுக்காக குரல் கொடுத்து வந்த ஒரு நபர் அவர் அரசியல் வாதி அல்ல அரசியல் செய்யவேண்டும் என்பது அவரது நோக்கம் அல்ல இதனை பொதுமக்களாகிய நாம் நன்றாக உணர்ந்து கொண்டுள்ளோம் வடமாகாணத்தில் தீவிரமாக வளர்ந்து வரும் அவரது வளர்சி சில சுயநலவாதிகளுக்கு பிடிக்கவில்லை என்பது மட்டும் எமக்கு தெளிவாகின்றது எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலினை இலக்காக வைத்தே அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளாரா? என்ற சந்தேகம் பொதுமக்களாகிய எமக்கு வலுவாக எழுகின்றது தமிழ்த்தேசியம் சுயநிர்னயம் என்பதைப்பற்றி தொடர்ந்து குரல்கொடுத்து வரும் அனந்தி சசிதரன் அவர்கள் வெளியேற்றப்படுவதை மொதுமக்களாகிய நாம் விரும்பவில்லை அதனை வன்மையாகக்கண்டிப்பதோடு அவரை கட்சியில் இருந்து நீக்கவேண்டம் என்று தமிழரசு கட்சியின் தலைமைப்பீடத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

தமிழ்த்தேசியம் சுயநிர்னயம் என்றெல்லாம் சிங்கள ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகள் விடுத்து போராடிக்கொண்டிருக்கும் தமிழ்மக்களாகிய நாங்கள் இன்று தமிழ்தேசியக்கூட்டமைப்பிடம் தமிழ்த்தேசியத்திற்காக போராடவேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுமா என்று பயப்படத்தொடங்கிவிட்டோம்.

எமது விருப்பத்துக்கு மாறாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால் இதுவரைகாலமும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராகப்போராடிய தமிழ் மக்கள் முதல் முறையாக தமிழரசுகட்சிக்கும் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராகவும் போர்க்கொடிதூக்குவோம் என்பதனை உறுதியாக கூறுகின்றோம்.

-நன்றி
வலிமேற்கு பிரதேச பொதுமக்கள்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila