இந்தியாவில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளை வடக்கில் மீள்குடியேற்ற வேண்டாம் என ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த வர்னசிங்க தெரிவித்துள்ளார்.
1983ம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையிலிருந்து வெளியேறி இந்தியா சென்ற அகதிகள், வடக்கில் மீள்குடியேற்றப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜே.என். டிக்ஸித் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென தெரிவித்துள்ளார்.
இந்தியா சென்ற இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகவும், இலங்கையில் குடியேறிய இந்திய வம்சாவளியினருக்கு குடியுரிமை வழங்குவதாகவும் இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இணக்கம் காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வாழ் இலங்கை அகதிகள் இலங்கையில் மீள் குடியேற்றப்பட வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோருவது, இந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.