வலி வடக்கு பகுதி பாடசாலைகளில் பரிசோதிக்க பட்ட நீர் மாதிரிகள் மிகச் செறிவான அளவில் எண்ணெயினைக் கொண்டிருப்பதாக அறிக்கை இடப்பட்டிருக்கின்றது
. இவ்விடத்தின் நீரினை மக்கள் சில காலம் அருந்துவது கூட பிற்காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது மிகவும் கவலையான விடயமாகும்
வலி வடக்கு பகுதி உள்ளடங்களாக யாழ் குடா நாட்டின் பல பகுதிகளில் உள்ள கிணறுகளில் ஒயில் காணப்படுவது வெளிப்படையாகவே தெரியவரும் நிலையில் அதனை மூடி மறைப்பதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள், மாகாண சபை அமைச்சர்கள் முன்னிற்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்த எண்ணைக் கசிவு பல பாடசாலைக் கிணறுகளிலும் அறியப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை வைத்தியசாலை நீர் மாதிரி பரிசோதனை அறிக்கை தெரிவிக்கிறது இந்த நிலையில் இவ்வறிக்கைக்கு என்ன சொல்ல போகின்றார்கள் இந்த மக்கள் பிரதி நிதிகள் என கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தண்ணீர் மாதிரிகள் அனைத்தும் எண்ணெய் இல்லை என்று வந்திருப்பதாக அடித்துக் கூறுகின்றனராம் இவர்கள் இவ்வாறான குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள், அற்ப சலுகைகளுக்காகத் தவறான துணைபோவது இறுதிவரை மன்னிக்கமுடியாத குற்றமாகும் என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இன்று எமக்குக் கிடைக்கப்பெற்ற நீர்மாதிரி அறிக்கைகளை நண்பர்களும் பொதுமக்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக வெளியிடுகின்றோம். (பெரும்பாலான 80வீதத்திற்கு மேற்பட்ட கிணறுகளில் எண்ணெய்க் கசிவு உறுதிப்படுத்தப்பட்டு விட்டது)
அன்பான பொது மக்களே! மாணவர்களே! நலன்விரும்பிகளே! தயவு செய்து பொய்யர்களின் கதைகளைக் கேட்டு எண்ணெய் கலந்த நச்சு நீரினை அருந்த வேண்டாம். புலம் பெயர்ந்து வாழும் நண்பர்களே! வலிகாமம் பகுதியில் சந்தேகமான இடங்களில் வாழும் தங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் இந்நீரனை அருந்த வேண்டாம் என அறிவுறை சொல்லுங்கள்.
நம் இனம் அழிவதை இது காக்கும்.