ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்படுகிறது.
இதற்கு சிறிலங்காவின் ஜனாதிபதியும், பிரதமரும் இணங்கியுள்ளார்கள்.
ஆனால் எதிர்கட்சித் தலைவர் நிமால்சிறிபால டி சில்வாவும், அவரின் கட்சியும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய எதிர்ப்பை தெரிவிக்கின்றனர்.
அதன் காரணமாகவே தற்போது 19ம் திருத்தச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் ரத்து செய்யப்படாது, குறைக்கப்பட்டுள்ளது.
மக்களால் வெறுக்கப்பட்டு துரத்தியடிக்கப்பட்ட மகிந்தவை மீண்டும் பதவிக்கு கொண்டு வருவதற்கான முயற்சியே இது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.