இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை மகஜர் ஒன்றினை கையளித்துள்ளார்.
தலைமன்னார் பியர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தலைமன்னார் துறை புகையிர நிலையத்தில் இருந்து நேற்று சனிக்கிழமை(14) புகையிரத சேவையினை ஆரம்பித்து வைக்கும் முகமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமன்னார் துறைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன் போது அவரை சந்தித்து உரையாடிய மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகை மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கடந்த 2012 ஆம் ஆண்டு மன்னார் ஆயர் அதிவணக்கத்திற்குரிய இராயப்பு யோசேப்பு ஆண்டகையினால் மன்னார் மற்றும் வவுனியா வாழ் மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மகஜருக்கான சரியான பதில் இதுவரையில் வழங்கப்படாத நிலையிலேயே குறித்த மகஜர் நேற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கையளிக்கப்பட்ட குறித்த மகஜரில் 16 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதே வேளை மன்னார் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண அமைச்சர்,வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோறும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மகஜர் கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.