அமைச்சர்கள் - இராஜாங்க அமைச்சர்கள் - பிரதி அமைச்சர்களாக SLFPயைச் சேர்ந்த 26 பேர் பதவிப் பிரமாணம்

அமைச்சர்கள் -  இராஜாங்க அமைச்சர்கள் - பிரதி அமைச்சர்களாக SLFPயைச் சேர்ந்த  26 பேர் பதவிப் பிரமாணம் :

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்பாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் அமைச்சர்களாகவும் இராஜாங்க அமைச்சர்களாகவும் பிரதி அமைச்சர்களாகவும் இன்று மாலை புதிதாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது.

சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 11 பேர் கபினட் அமைச்சர்களாகவும் 5 பேர் இராஜாங்க அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதி அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்கும் நோக்குடனேயே இவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரு நாட்களாக நடத்திய பேச்சுக்கனையடுத்தே தேசிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் இணைத்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்துக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பி.க்களான ஏ.எச்.எம்.பௌசி எஸ்.பி. நாவின பி.கமகே சரத் அமுனுகம எஸ்.பி.திசாநாயக்க ஜே.பி.தென்னக்கோன் எப்.பெரேரா எம்.யாப்பா அபயவர்த்தன ஆர். கூரே விஜத டிசொய்ஸா எச்அரரவீர ஆகியோர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

இதன்படி அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களாக பதவி ஏற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு,

ஏ.எச்.எம்.பௌசி - இடர் முகாமைத்துவ அமைச்சர்

எஸ்.பி.நாவின்ன - தொழில் அமைச்சர்

பியசேன கமகே - திறன் விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர்

சரத் அமுணுகம - உயர்கல்வி மற்றும் ஆராச்சி அமைச்சர்

எஸ்.பி.திஸாநாயக்க - கிராமிய விவகார அமைச்சர்

ஜனக பண்டார தென்னக்கோன் - மாகாண சபைகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

பீலிக்ஸ் பெரேரா - விஷேட செயற்திட்ட அமைச்சர்

மஹிந்த யாப்பா அபேவர்த்தன - பாராளுமன்ற விவகார அமைச்சர்

ரெஜினல் குரே - விமான சேவைகள் அமைச்சர்

விஜித் விஜயமுனி சொய்சா - நீர்பாசன அமைச்சர்

மஹிந்த அமரவீர - கடற்தொழில் அமைச்சர்

இராஜாங்க அமைச்சர்களாக பதவி ஏற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு,

பவித்ராதேவி வன்னியாராச்சி - சுற்றுச்சூழல் இராஜாங்க அமைச்சர்

ஜீவன் குமாரதூங்க - தொழில் இராஜாங்க அமைச்சர்

மஹிந்த சமரசிங்க - நிதி இராஜாங்க அமைச்சர்

சீ.பி.ரத்நாயக்க - அரச நிர்வாக இராஜாங்க அமைச்சர்

டிலான் பெரேரா - வீடமைப்பு மற்றும் சமுர்த்தி இராஜாங்க அமைச்சர்

பிரதி அமைச்சர்களாக பதவி ஏற்ற அமைச்சர்கள் விபரம் வருமாறு,

தயாசிறித திசேரா - கடற்தொழில் பிரதி அமைச்சர்

திஸ்ஸ கரலியத்த - புத்த சாசன மற்றும் ஜனநாயக நிர்வாகம் தொடர்பான பிரதி அமைச்சர்

ரஞ்சித் சியாம்பலாபிடிய - உள்நாட்டலுவல்கள் பிரதி அமைச்சர்

லக்ஷ்மன் செனவிரத்ன - அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்

லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன - விமான சேவைகள் பிரதி அமைச்சர்

லலித் திஸாநாயக்க - நீர்பாசன பிரதி அமைச்சர்

ஜகத் புஸ்ப குமார - பெருந்தோட்டக் கைத்தொழில் பிரதி அமைச்சர்

லசந்த அழகியவத்த - கிராமிய விவகார பிரதி அமைச்சர்

சுதர்ஷனி பிரணாந்துப் பிள்ளை - உயர்கல்வி மற்றும் ஆராச்சி பிரதி அமைச்சர்

சாந்த பண்டார - ஊடகதுறை பிரதி அமைச்சர்
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila