ரணில் விக்கிரமசிங்கவின் நரித்தந்திரம் பலித்துப் போகுமோ என்ற அச்சத்தையும் அவர்களுக்குள் ஏற்படுத்தியது.
தனது வடக்குக்கான பயணத்தில் வடமாகாண முதலமைச்சரையும் வடமாகாணசபையையும் ஓரம்கட்டுவதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாக கொண்டிருந்தார் என்பது வெளிப்படையான விடயமாகியுள்ளது.
இந்த நிலையில், கட்சியை வளர்க்க வடக்குக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் நிகழ்வுகளில், தான் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் உயர் பாதுகாப்பு வலய முகாம்களை படிப்படியாக அகற்றி மக்களை மீளக்குடி யேற்றுவதாக அறிவித்தால், அவருடன் கைகோர்க்க தயார் என்றும் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்தார்.
இத்தோடு இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை, முடியப் போவதும் இல்லை. ஏனென்றால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை பொறுத்தவரையில் வடக்கில் தனது கட்சியை காலூன்றவைப்பதற்கு முயற்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமாகவும் உறுதியாகவும் ஒன்றுபட்டு நிற்கும்வரைக்கும் அது சாத்தியமாகப் போவதில்லை என்பதும் அவருக்குத் தெரியும். எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவை எற்படுத்தினால், அந்த இடைவெளிக்குள் தாம் நுழைந்துகொள்ளலாம் என்று அவர் கணக்கு போடுவதாகத் தெரிகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, அடுத்த தேர்தலில் ஐ.தே.கட்சியை பலமான நிலைக்கு கொண்டுவருவதற்கு அவர் எத்தகைய வியூகத்தை பயன்படுத்துகிறாரோ, அதேபோன்ற தொரு வியூகத்தை சற்று வித்தியாசமான வடிவத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவும் பயன்படுத்திக்கொள்கிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை ஓரங்கட்டுவது அவரது முதற்குறியாக தெரிகிறது. முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உறுதியான, நியாயமான சில செயற்பாடுகளால் அதிருப்தியடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரும், பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் நரித்தனத்துக்கு பலியாக தொடங்கியுள்ளனர் என்ற பேச்சும் உள்ளது.
எவ்வாறாயினும், இந்த விவகாரம் ரணில் விக்கிரமசிங்க, சி.வி.விக்னேஸ்வரன் என்ற இரண்டு தனிப்பட்ட நபர்களுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் சிலர், அவ்வாறானதொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதன் மூலம் தமது செயலை நியாயப்படுத்த முனைவதாக தெரிகிறது.
அதேவேளை, இது இன ரீதியான பிளவு, வரலாற்று ரீதியாக தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டு வந்த அநீதிகளின் தொடர்ச்சி என்றவாறான விமர்சனங்களும் ஊடகங்களில் முன்வைக்கப்படுகின்றன. அவ்வாறு முன் வைக்கப்படும் நியாயங்கள் தட்டிக் கழிக்கப்பட முடியாதவை என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.
தமிழரின் அரசியல் பலத்தை சிதைப்பது என்பதே எப்போதும் கொழும்பு அரசின் மைய நோக்கமாக இருந்து வந்திருக்கிறது என்பது கசப்பானதொரு உண்மை. கொழும்பு அரசின் மையமாக விளங்கிய தலைவர்கள் எல்லோருமே இதனையே செய்திருக்கிறார்கள்.அந்த வகையில்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாகப் புறமொதுக்க முடியாது.
இந்தக் கட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தோன்றியுள்ள முரண்பாடுகள், தமிழ் மக்களிடையே மட்டும் கவனிப்பை ஏற்படுத்தவில்லை. சர்வதேச சமூகமும் கூட இந்த விவகாரத்தை உன்னிப்பாக அவதானிக்கிறது, உற்றுநோக்குகிறது என்பதை தெளிவாக உணரமுடிகிறது.
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்து உருவாகியுள்ள புதிய அரசாங்கம் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லாட்சி உள்ளிட்ட விடயங்களில் முன்னைய அரசாங்கத்தை விடவும் சாதகமானதொரு நிலைமைக்கு நாட்டைக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கை சர்வதேச சமூகத்திடம் நிரம்பியிருக்கிறது.
அந்த எதிர்பார்ப்பை பல்வேறு நாடுகளும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வெளிப்படையாகவே எடுத்துக் கூறியிருக்கின்றன.
இத்தகைய நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், வடமாகாண முதலமைச்சருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் தோன்றியுள்ள முரண்பாடு, தமிழ் - சிங்கள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சிகளை சிதைத்துவிடுமோ என்ற கவலையை சர்வதேச சமூகத்திடம் ஏற்படுத்தியுள்ளது.
அண்மைய நாட்களில் வடமா காணத்துக்குகள நிலைகளை கண்டறிவதற்காக பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டு இராஜ தந்திரிகள், சர்வதேச பிரமுகர்கள், இந்த முரண்பாடு குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றனர். ஜேர்மனி, அவுஸ்திரேலிய தூதுவர்கள் யாழ். ஆயரிடம் இது பற்றி விசாரித்தறிந்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் யார் பக்கம் நியாயம் உள்ளது என்பதை அறிந்துகொள்வதற்காக வேறு பல மட்டங்களிலும் அவர்கள் கலந்துரையாடல்களை நடத்தியிருக்கின்றனர்.
ஆட்சி மாற்றத்துக்கு பிந்திய சூழலில் தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதற்கு அரசாங்கம் முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்பது சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த சூழல் இந்த முரண்பாட்டினால் சிதைக்கப்பட்டுவிடுமோ என்ற கவலை வெளிநாட்டு இராஜதந்திர மட்டங்களில் ஏற்பட்டிருப்பதில் வியப்பில்லை.
தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற புதிய அரசாங்கம் தவறிவிட்டது என்று வடமாகாண முதலமைச்சர், அவுஸ்திரேலிய தூதுவரிடம் குறிப்பிட்டிருந்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினது செயற்பாடுகளின் மீதுள்ள அதிருப்தி கூட அவரை இந்தளவுக்கு விரைவாக இத்தகைய கருத்தை வெளிப்படுத்த தோன்றியிருக்கலாம்.
தற்போதைய அரசாங்கம், வரையறுக்கப்பட்ட காலமே பதவியில் இருக்கக்கூடியது என்பதும் வரையறுக்கப்பட்ட எல்லைகளை தாண்டாது என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, வடமாகாண முதலமைச்சரும் சரி நன்றாகவே அறிந்திருக்கின்றனர். ஆனாலும், அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது அதிருப்தியை, அவநம்பிக்கையை வெளிப்படுத்தும் அவசரம் அவர்கள் மத்தியில் தோன்றியுள்ளது என்றால், அதற்கு அடிப்படைக் காரணம் அவர்களின் மீது ரணில் விக்கிரமசிங்ககை வைக்க முயன்றதே.
எனவே, இந்த முறுகல், தமிழர் அரசியலை ஓரங்கட்டி பழகிப்போன தென்னிலங்கையின் அரசியல் பாரம்பரியத்தின் விளைவு என்பதே சரியான கருத்தாக தெரிகிறது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கிலுள்ள தமிழர்களிடம் எப்படி அரசியல் நடத்துவது என்பதை அறியாதவராக இருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதையில் பயணிக்க நினைப்பதே அவர் செய்யும் தவறு. இது அவரையும் அதே படுகுழிக்குள் தள்ளிச் செல்லும்.