அரச காணிகளை தனியாருக்கோ அல்லது வேறு அமைப்புகளுக்கோ வழங்கும்போது அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய வடக்கு மாகாண சபையின் அனுமதி பெறப்படவேண்டும் என மத்திய காணி ஆணையாளரைப் பணிக்குமாறு கோரி வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதன் பிரதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையினில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்தக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பண்டா - செல்வா ஒப்பந்தம், டட்லி - செல்வா ஒப்பந்தம், இந்திய - இலங்கை உடன்படிக்கை, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் முன்மொழிவுகள் மற்றும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் படி, அரச காணி மாகாணத்துக்கு உரித்தான விடயம் என்பதையும் சுட்டிக்காட்டியே இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு வடக்கு மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பினில் பணிப்புரை விடுத்தல் நல்லிணக்க நடவடிக்கைகளின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் எனவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Add Comments