தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்திய சர்வதேச மே தின நிகழ்வுகள் வடக்கு மாகாணத்தில் மக்களின் பலம்மிக்க ஆதரவுடன் எழுச்சியாக கொண்டாடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய அனைத்து இடங்களிலும் தொழிலாளர்களின் உரிமைக்கான குரல்கள் பேரார்வத்துடன் எழுப்பட்டதுடன் பேரணிகளும் ஊர்வலங்களும் ஆங்காங்கே சிறப்பாக நிகழ்த்தப்பட்டிருந்தன.
இதில், வடக்கு மாகாண கூட்டுறவாளர்களின் மே தின ஊர்வலம் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் யாழில் நேற்றைய தினம் எழுச்சியுடன் நடை பெற்றுள்ளது.
நல்லூர் கிட்டுப் பூங்காவில் இருந்து பிற்பகல் 2.30 மணியளவில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் குறித்த ஊர்வலம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேற்படி ஊர்வலம் ஆயிரக்கணக்கான கூட்டுறவு ஊழியர்களின் பங்கேற்புடன் நல்லூர் கந்தன் ஆலய வீதியூடாக பயணித்து கோயில் வீதியூடாக யாழ்.நகரை வந்தடைந்து பின்னர் முற்ற வெளியை அடைந்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதன் பின்னர் யாழ்.வீர சிங்கம் மண்டபத்தில் மே தின கூட்டமும் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடக்கு மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம், உறுப்பினர்களான திருமதி அனந்தி சசிதரன், எம். கே.சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், பா.கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கூட்டத்தின் முடிவில் குறித்த ஊர்வலத்தில் பங்குபற்றிய சிறந்த ஊர்வலங்களுக்கான பெறுமதி மிக்க பரிசில் தொகைகளும் கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.