|
பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் மற்றும் பிரதம நீதியரசர் சிறிபவன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் விஜயம் மேற்கொண்டு வன்முறை சம்பவத்தால் தாக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட்டுள்ளதுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.
புங்குடுதீவு மாணவியின் கொலையினை அடுத்து நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் இடம்பெற்ற வன்முறையினால் நீதிமன்றம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டது. அத்துடன் சட்டத்தரணி ஒருவருடைய கார், சிறைச்சாலை வாகனம் என்பன அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவங்களினை அடுத்து கடந்த 2 நாட்களாக நீதிமன்ற சூழல் பெரும் பதட்டம் நிலவி வருகின்றது. அத்துடன் குறித்த சம்பவத்தைக் கண்டித்து யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்ததுடன் புறக்கணிப்பினையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன், பிரதம நீதியரசர் சிறிபவன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் தாக்குதல்களையும் பார்வையிட்டுள்ளனர்.
இதேவேளை, நீதிமன்றத்தை சூழவுள்ள பகுதிகளில் அதிரடிப் படையினர் மற்றும் பொலிஸாரும் தொடர்ந்தும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
|
|
22 மே 2015, வெள்ளி 11:45 மு.ப | கருத்து [ 0 ] |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|  | நெல்லியடியில் புதிய பேருந்து நிலையம் வட மாகாண போக்குவரத்து அமைச்சினால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வடக்கு முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். |
|
|
|
|
|  | பொலிஸ் மா அதிபர், பிரதம நீதியரசர் யாழ். நீதிமன்றுக்கு விஜயம் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் மற்றும் பிரதம நீதியரசர் சிறிபவன் ஆகியோர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்கு சற்றுமுன்னர் விஜயம் மேற்கொண்டு வன்முறை சம்பவத்தால் தாக்கப்பட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதியை பார்வையிட்டுள்ளதுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டு வருகின்றனர். |
|
|
|
|
|
|
|
|
|
நெல்லியடியில் புதிய பேருந்து நிலையம் |
வட மாகாண போக்குவரத்து அமைச்சினால் நெல்லியடியில் அமைக்கப்பட்ட பேருந்து நிலையத்தை வடக்கு முதல்வரும் போக்குவரத்து அமைச்சரும் வைபவ ரீதியாக திறந்து வைத்தனர். மேலும்... |
22 மே 2015, வெள்ளி 2:30 பி.ப | கருத்து[ 0 ] |
|
|
|
|
|
ஹாட்லி, உடுப்பிட்டி இறுதிப் பலப்பரீட்சை |
பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இடம்பெற்ற அரை இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று இறுதியாட்டத்துக்கு தகுதி பெற்றன உடுப்பிட்டி அ.மி. கல்லூரி மற்றும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி. மேலும்... |
28 பெப்ரவரி 2015, சனி 9:25 மு.ப |
|
|
|
|
|
|
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=703204046022217836#sthash.EJlCNAoj.dpuf