ஒரே நாளில் எட்டுக் குடும்பங்களுக்கு இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட துயரக் கதை! அதிரவைக்கும் சாட்சியம்

யாழ்ப்பாணம் தென்மராட்சி மந்துவில் என்ற கிராமத்தில் தாங்களும் தங்கள் தொழிலும் கோவில் திருவிழாக்களும் என்றிருந்த எங்கள் உறவுகளை 2006ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டிருந்த மகிந்த ராஜபக்சவின் வழிநடத்தலின் கீழான இலங்கை இராணுவம் பிடித்துச்சென்று காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் கண்ணீர் கதை இது.
இது ஒரே நாளில், ஒரு இரவில் வேலத்தம்மன் ஆலய சந்நிதியில் நடந்தேறியுள்ளது.கண்முன்னே இராணுவம் தங்கள் பவள் வாகனத்தில் ஏற்றிச்சென்ற கண்ணால் கண்ட சாட்சியமாக இவர்களின் கண்ணீர் இன்று எங்களை அதிரவைக்கின்றது.
மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த மார்க்கண்டு சரஸ்வதி
ஒரே கிராமத்தை சேர்ந்த எட்டுக்குடும்பங்களுக்கு ஒரே நாளில் இலங்கை இராணுவத்தால் நடத்தப்பட்ட துயரக்கதையை இந்த உலகம் அறியட்டும்.
எட்டுக்குடும்பத்தின் கண்ணீர் தங்கள் உறவுகளை தேடிக்களைத்த ஆற்றாமை, விம்மல், கோபம், சாட்சியம் யாவும் இங்கே......

2006ஆம் ஆண்டு 05ஆம் மாதம் 6ம் நாள் இரவு மந்துவில் வேலத்தம்மன் ஆலய கும்பாபிசேக நாளன்று இரவு ,இராணுவம் கோவில் தொண்டுக்காக அங்கு படுத்திருந்த எட்டுக்குடும்பத்தை சேர்ந்தவர்களை பிடித்து கைகளை கட்டி பவள் வாகனத்தில் ஏற்றிச்சென்றது.
இதுவரை அவர்கள் பற்றிய எந்தவித தகவல்களும் இல்லை.மகிந்த ராஜபச்சவின் இராணுவம் அக்காலப்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு பொறுப்பாக இருந்த இராணுவ தளபதி உள்ளிட்டவர்களே இந்த கடத்திக் காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் தொடர்பான குற்றவாளிகள்.
கொடிகாமம் வரணி இயற்றாலை இராமச்சந்திரன் செல்லம்மா
மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த பொன்னம்பலம் இராசம்மா
மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த வைகுந்தவாசன் சசிதா
மந்துவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த கந்தசாமி யோகநாயகி
மந்துவில் மேற்கு கொடிகாமத்தை சேர்ந்த இராசநாயகம் பிள்ளை சிவகாமிப்பிள்ளை
மந்துவில் மேற்கு கொடிகமத்தை சேர்ந்த செல்வரட்ணம் மல்லிகாதேவி
மந்துவில் கிழக்கு கொடிகாமத்தை சேர்ந்த குணரட்ணம் சிவபாக்கியம் ஆகிய குடும்பங்களை சேர்ந்த
பொன்னம்பலம் பார்த்தீபன்
பொன்னம்பலம் காண்டீபன்
வைகுந்தவாசன் வைகுந்தகுமார்
கந்தசாமி பரிமேலழகர் மார்க்கண்டு
புஸ்பகாந்தன் செல்வரட்ணம்
சிவானந்தம் செல்வரட்ணம்
சிறீஸ்குமார் குணரட்ணம்
தயாரூபன் ஆகியோரே காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகள்.........
Share this article :
Print PDF

Related Post:

 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila