யாழ்.போக்குவரத்து பொலிஸார் மற்றும் மாவட்ட மோட்டார் போக்குவரத்து பிரிவினரால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உரிய தரத்தில் இல்லாத வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு திருத்தியமைக்க பணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் ஏனைய மாகாணங்களில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் வாகனங்களை தொடர்ச்சியாக சோதனைக்குட்படுத்தும் நடைமுறை இருந்து வருகின்றது. ஆனால் யாழ்.மாவட்டத்தில் மட்டும் இந்த ஒழுங்கு பின்பற்றப்படவில்லை. இந்நிலையில் இன்றைய தினம் திடீர் என்று சகல வாகனங்களும் யாழ்.பொது நூலகத்திற்கு அருகில் அழைக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. குறைபாடுள்ள வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு திருத்தியமைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றைய சோதனையில் யாழ். மாவட்டச் செயலரும் பங்கெடுத்திருந்தார்.