எனவே, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அசாமில் சுப்பிரமணியசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அசாம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சுப்பிரமணியசாமிக்கு கடந்த 19ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை சுப்பிரமணியசாமியிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இதையடுத்து, சுப்பிரமணிசாமிக்கு ஜாமீனில் வெளியில் வர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்த நீதிபதி, சுப்பிரமணியசாமியை கைது செய்து 30ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். |
சுப்பிரமணியசாமிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது
Related Post:
Add Comments