தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் வழங்கவேண்டிய கோதுமை மா, தேயிலை தூள், சம்பள முற்பணம் மற்றும் ஏனைய சலுகைகளையும் வழங்க முடியாது என நிர்வாகம் கூறியதையடுத்து உடனடியாக இச்சலுகைகளை வழங்கவேண்டும் என தெரிவித்தே இத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு 1000 ரூபா சம்பள உயர்வு கோரி தோட்ட தொழிலாளர்கள் மெதுவாக பணி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட இவர்களுக்கு தோட்ட நிர்வாகம் இடையூர்களை கொடுப்பதாகவும் இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.