இன்று, யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டத்தில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் குடிநீர் போத்தல்கள் விற்பனை குறித்து கலந்துரையாடப்பட்டது.
கடந்த மாதம் யாழ் நகர பகுதியில் விற்பனை செய்யப்பட்ட ஒன்பது குடி நீர்ப்போத்தல்கள் கைப்பற்றப்பட்டு, பகுப்பாய்வு திணைக்களத்தால் பரிசோதிக்கப்பட்டப்போது, அதில் எட்டுப் போத்தல்களில் உள்ள குடிநீரில் அதிகளவான காரத்தன்மையும், கிரிசும் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற கூட்டத்தில் இதனை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தவும், கலப்படங்கள் என சந்தேகிக்கப்படும் தண்ணீர் போத்தல்கள் சம்பந்தமாக முறைப்பாடுகளை அரசாங்க அதிபருக்கு முறையிடுமாறும் யாழ் மாவட்ட அரச அதிபர் பொது மக்களை கோரியுள்ளார்.