யாழ்ப்பாணத்தினில் இன்று வெள்ளிக்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்;திப்பினில் மேலும் தெரிவிக்கையினில் கொழும்பில நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மஹிந்த அமரவீர என்பவர் மஹிந்த ராஜபக்ஷ முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முப்படையினர் ஆகியோர் தண்டிக்கப்படமாட்டார்களென தெரிவித்துள்ளார்.சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடாகவும் இதுவே அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதச விசாரணையாளர்கள் வெறும் கண்காணிப்பாளர்களாக மட்;டுஆம இருப்பார்களெனவும் அவர்கள் விசாரணைகளினில் பங்கு கொள்ளமாட்டார்களென்றும் இலங்கை அரசு மீளமீள கூறிவருகின்றது.இது அப்படிப்பட்ட உள்ளக விசாரணையென ஜனாதிபதியும் பிரதமரும் தொடர்ந்தும் கூறிவருகின்றனர்.
ஆனால் ஜ.நா தீர்மானத்தை தமிழரசுகட்சி தலைவர் சம்பந்தன் ,சுமந்திரன் போன்றவர்கள் மனப்;பூர்வமாகவும் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் எச்சந்தர்ப்பததிலும் உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.அரசு கூறுவது போன்ற நீதிமன்றங்களையும் தமிழ் மக்கள் அங்கீகரிக்கப்போவதில்லை.
அரசு உள்ளக விசாரணையென விடாப்பிடியாக கூறிவரும் நிலையினில் எவ்வாறு ஜ.நா பரிந்துரைகளை அமுல்படுத்தப்போகின்றதென்பது பற்றி அதனை மனப்பூர்வமாக வரவே;ற்ற இரா.சம்பந்தன் போன்றவர்கள் தமிழ் மக்களிற்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு என்ன நடவடிக்கைகளை எடுத்தாலும், அதிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புத் துறையின் முன்னாள் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முப்படையினர் ஆகியோர் காப்பாற்றப்படுவார்களென சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.