வடபகுதியில் காணாமற் போனோரின் குடும்பங்களை கொழும்புக்கு அழைத்து அவர்களது மன நிலையை மாற்றும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாகவும் இதை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் காணாமற் போனோரைத் தேடியறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் குற்றம் சாட்டியுள் ளார்.
காணாமற் போனோர் தொடர் பாகநேற்றையதினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மகா நாட்டிலேயேஅவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் தொடர் பாக சில தென்னிலங்கை மனித உரிமை செயற்பாட்டாளர்கள் காணா மல் போன குடும்ப உறவுகளை வேறு திசைக்குகொண்டு செல் வதை காணக்கூடியதாக உள்ளது.
காணாமல் போனவர்களின் உறவுகள் வறுமையில் வாடுவதை அவதானித்த அமைப்புகள் அவர் களை ஏமாற்றும் செயற்பாட்டை செய்வது கவலைக்குரியதாகும். ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைபேரவையின் காணாமல் போனவர்கள் தொடர்பானஅறிக் கையை மையமாக வைத்து அத னை அரசாங்கத்திற்கு சாதகமான முறை யில் மாற்ற தமிழ் உறவுகளை திசை திருப்பும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் தமிழ் தலைமைகள் காணாமல் போன வர்கள் தொடர்பாக தகுந்த நடவடி க்கை எடுக்காததனாலும், இவர்க ளும் அரசாங்கத்தின் திட்டத்தை வரவேற்கின்ற காரணத்தாலும் தென்னிலங்கை அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கிதமிழ் மக்களின் மனநிலையைமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு வறுமையில் இருந்தா லும் தமது உறவுகள் மீளும் வரை, அரசாங்கம் பொறுப்பானபதிலை வழங்கும்வரைகாணாமல் போன உறவுகளின் குடுபத்தினர் தமது போராட்டத்தை நிறுத்தப் போவ தில்லை. இம்மக்கள் நிவாரண த்தை கோரவில்லை. இதில் இவர் கள் தெளிவாக உள்ளனர். அவர்கள் கேட்பது தமது உறவுகள் எங்கே என்பது மட்டும்தான்.
தற்போது இந்த போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய சர்வதேச மட்டத்திலும், உள்@ர் மட்டத்தி லும் பல விடயங்கள் முன்னெடு க்கப்படுகின்றன. இவற்றுக்கு பலி யாக வேண்டாம். போராட்டத்தை தொடர்வதே உண்மையைகண் டறிய ஒரேவழியாகும்.தமிழ் தலை மைகள் தமதுநிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என காணாமல் போனோ ரைத் தேடியறியும் குழு வேண்டு கோள் விடுக்கின்றது எனஅவர் மேலும் தெரிவித்தார். (இ-9)